கிறிஸ்துவை விட்டு விலகுவதற்கு ஏதுவாக சோதனைக்காரன் கொண்டுவருகிற சோதனைகளில் விழுந்து விடாதிருங்கள்.
தேவனால் புதுச்சிருஷ்டியாக பிறந்திக்கிற நாம், விசவாசத்தில் உறுதியாய் நின்று ஜெயங்கொள்வோம்.
எல்லா சமயத்திலும் ஆவியிலே நிரம்பி ஜெபிக்க நமக்குப் பரிசுத்த ஆவியானவரின் துணை மிகவும் அவசியம்.
உங்களைப் பகைக்கிறவர்களை சிநேகியுங்கள் அவர்களுக்கு நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்; கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
நம் அனுதின வாழ்வில் கர்த்தர்மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, நம் விசுவாசத்தின்படியே அவர் நாம் விரும்புவதை தந்தருளுவார்.
நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் அதிக நேரம் செலவழிக்கும்போது, கர்த்தர் உங்களைக்கொண்டு மற்றவர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைப்பார்.
ஆண்டவர் இயேசு தம்முடைய சீஷர்கள்மீது மட்டுமல்ல, தம்மை வெறுத்தவர்கள்மீதும் அன்பு கூர்ந்தார்.
தேவனை முழு இருதயத்துடன் தேடுங்கள் அவர் உங்களை ஆதரித்து, செம்மையான பாதைகளில் வழிநடத்துவார்.
கர்த்தர் நம்மை தம்முடைய பரிசுத்தத்தினால் மட்டுமல்ல, சந்தோஷத்தினாலும் நிரப்புவார்.