பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வரும்பொழுது தேவ அன்பு நம் இருதயத்தை நிரப்புகிறது.
ஆண்டவரை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள் அப்பொழுது அவர் உங்களை ஆசீர்வதிப்பார், நீங்கள் ஆசீர்வாதமாய் வாழ்வீர்கள்.
உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்றே ஆண்டவர் விரும்புகிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் வெற்றி பெற்றவர்களாக வாழ்வதற்கு முக்கியமானது விசுவாசமே.
ஆண்டவர் உங்களைப் பார்த்து, “மகனே, மகளே” என்றுதான் அழைக்கிறார். நீங்கள் அவரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் உங்கள் அருகிலே வருவார்.
கர்த்தர் விரும்பாத தீமையான வழிகளை விட்டு விலகுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களை தமது கனத்திற்குரிய பாத்திரமாக மாற்றுவார்.
நாம் பரிசுத்த ஆவியானவருக்கு முதலிடம் கொடுப்போம், கிறிஸ்துவின் பிரசன்னத்தைப் பெற்று அனுபவிப்போம்.
உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தெய்வீக மாறுதலை கொண்டுவரும்.
ஆண்டவரை நீங்கள் உண்மையாய் தேடும்போது, சத்துருக்களும் உங்களோடே சமாதானமாகும்படி அவர் கிருபை செய்வார்.