நாம் வாழ்ந்திருக்கும்படியாகவே, இயேசு பரலோகத்திலிருந்து பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து வந்தார்.
நம்முடைய தவறை பிதாவானவர் மன்னிப்பதுபோல, நாமும் பிறர் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும்.
ஆண்டவர் நமக்கு கொடுத்திருப்பதை நாம் சந்தோஷமாக எண்ணுவோமானால், கர்த்தர் நம்மை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
ஆண்டவர் நம்முடைய பாரங்களை சுமந்ததுபோல, நீங்களும் மற்றவருடைய பாரங்களை சுமக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நம் தேவைகளின் மத்தியில் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் நம்மீது மனதுருகுவார்.
ஜீவஒளியான இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள் அவர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை செய்வார்.
நாம் ஒவ்வொருவரும் வசனத்தின்படியே நடந்து விசுவாசத்தின்படியே ஆசீர்வாதம் பெறுவோம்.
ஆண்டவர் உங்களுடைய உழைப்பை கனம்பண்ணி உங்களுக்கு உதவிச்செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவுக்கு நம் இருதயத்தில் இடங்கொடுக்கும்போது, கிறிஸ்து எல்லாவற்றையும் புதிதாக்குகிறார் என்பதே மெய்யான உண்மை.