நீங்கள் ஆண்டவருக்கு உங்கள் இருதயத்தை கொடுக்கும்போது பண்படாத நிலமான உங்கள் இருதயம் பண்படுத்தப்படும்.
ஆண்டவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிற நடக்கையை தினமும் நாம் கவனமாய் பின்பற்ற வேண்டும்.
தேவசமூகத்தில் உங்களை தாழ்த்துங்கள் அப்பொழுது அவர் உங்களை கனப்படுத்தி உயர்த்துவார்.
உருக்கமும் இரக்கமும் நிறைந்த தேவனை நோக்கிப்பாருங்கள் அவர் உங்கள் கஷ்டங்களை மாற்றுவார்.
நீங்கள் கர்த்தருக்கு பயப்படும்போது, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் அளவில்லாத ஆசீர்வாதத்தை பெறுவீர்கள்.
ஆண்டவர் நித்தமும் உங்களோடு வரும்போது, நீங்கள் ஆண்டவரின் நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக இருப்பீர்கள்.
ஜீவ தண்ணீராகிய இயேசு உங்கள் வாழ்க்கையில் வரும்போது, நீங்கள் தாகமடைவதில்லை.
ஆண்டவர் இயேசு, உங்கள் பலவீனத்தினின்று உங்களை குணமாக்க விருப்பமுள்ளவராயிருக்கிறார்.
தேவன் தமது தயவினாலும் இரக்கங்களினாலும் கிருபையினாலும் உங்களுக்கு முடிசூட்டுவார்.
தேவன் நம்மோடிருந்தால் இவ்வுலகக் கவலைகள், சோர்வுகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.