நீங்கள் தேவனின் அழைப்புக்கு தகுதியானவர்கள்
Sis. Evangeline Paul Dhinakaran
28 May
அன்பு நண்பரே, கர்த்தர் உங்களிடம் கூறுகிறார், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்” (எரேமியா 1:5). உன் தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பே உன்னை அறிந்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லும்போது அது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது! தேவன் தாமே நம்மை படைத்திருக்கிறார். நம்மை படைப்பதற்கு முன்பே, அவர் நம்மைக் குறித்து அனைத்தையும் அறிந்திருக்கிறார். தேவன் எப்படி உங்களை உருவாக்கியிருக்கிறார் ? எபேசியர் 2:10-ல் உள்ளதைப் போல, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."
ஆம், அன்பானவர்களே, உங்கள் தாயின் வயிற்றில் உங்களை உருவாக்குவதற்கு முன்பே கர்த்தர் உங்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம் செய்திருக்கிறார். அன்பு நண்பரே, நீங்கள் நற்கிரியைகளை செய்வதற்காக கர்த்தர் உங்களுக்காக எல்லாவற்றையும் முன்கூட்டியே ஆயத்தம் செய்திருக்கிறார். அதனால்தான் தாவீது சங்கீதம் 139:16-ல் கூறுகிறார், “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." எபேசியர் 2:10-ல் உள்ளதைப் போல, கர்த்தர் உங்களை இயேசு கிறிஸ்துவில் நற்கிரியைகளை செய்வதற்காக உருவாக்கியிருக்கிறார். உங்களைப் படைப்பதற்கு முன்பே தேவன் உங்களுக்காக அனைத்தையும் படைத்துள்ளார். ஆதிகாலம் முதல் ஆண்டவர் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் திறமைகளை கர்த்தர் அறிவார். உங்கள் பரிசுகளையும் உங்கள் அழைப்பையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே, அன்பு நண்பரே, கர்த்தருக்காக நற்கிரியைகளை செய்யாமலிருப்பதற்கு நீங்கள் எந்த காரணத்தையும் சொல்ல முடியாது. நீங்கள் நற்கிரியைகளைச் செய்ய தேவனால் உருவாக்கப்பட்டுள்ளீர்கள் . ஆகவே, நீங்கள் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு தகுதியானவர். நண்பரே, இனிமேலாவது கர்த்தருக்காக ஊழியம் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள். உங்களை நீங்கள் அறிவதை விட கர்த்தர் நன்கு அறிவார். இன்றே, உங்கள் வாழ்க்கையையும் திறமைகளையும் கர்த்தருக்கென்று பயன்படுத்துங்கள்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. தகப்பனே, உமது விசேஷித்த அபிஷேகம் இன்று என்மீது வரட்டும். ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்த அனைத்து திறமைகளை உமது பணிக்காக பயன்படுத்த உதவும். என் வாழ்க்கையில் நீர் எனக்குக் கொடுத்த தாலந்துகள் உமது நாமத்திற்கு மகிமையை சேர்க்கட்டும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.