உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்
Dr. Paul Dhinakaran
23 Jun
என் அன்பு நண்பரே, இன்று கர்த்தர் உங்களுக்கு ஒரு அற்புதமான வாக்குத்தத்தம் அளித்துள்ளார். “நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” (ஆதியாகமம் 15:1) என்று அவர் கூறுகிறார். ஆபிரகாம் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரை நம்பியதால், அவர் மகா பெரிய பலனைப்பெற்றார். அவர் நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் கர்த்தரை முழுமனதோடு நம்பினார். ஆபிரகாம் சுயநலமில்லாமல், தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல், தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்ய விரும்பியதால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஆபிரகாமிடம், “ஆபிரகாமே, நானே உனக்கு கேடகம், நான் உனக்காக யுத்தம்பண்ணுவேன் . நானே உன்னுடைய மிகப் பெரிய பலன்” என்றார். என் பிள்ளையே, சர்வவல்லமையுள்ள தேவனாகிய என்னிலிலுள்ள ஒவ்வொரு பலனும், நன்மையும் உனக்குச் சொந்தமாகும் என்று உங்களை பார்த்து அவர் சொல்லுகிறார். ஆம் நண்பரே, இன்று முதல் கர்த்தர் உங்கள் பலனாக இருக்கப்போகிறார். ஒருபுறம் அவர் உங்களைக் காக்கும் கேடகமாக இருப்பார். மறுபுறம், அவர் உங்களைப் பலப்படுத்தி, தமது சித்தத்தை நிறைவேற்றுவார். இயேசுவிலுள்ள பூரணமான எந்த வரமும் உங்களுடையதாயிருக்கும். இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!
கர்த்தர் ஏன் நமக்கு பலனளிக்கிறார் தெரியுமா? முதலாவதாக, "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்" (ரோமர் 2:6). ஆம், நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். எபிரெயர் 6:10-ன்படி, அவருடைய ஊழியர்களை நாம் நேசிக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். நாம் தேவனுடைய ஊழியர்களை நேசித்து, அவர்களைக் கவனித்து, கீழ்ப்படிந்து, அவர்கள் மூலம் தேவனுடைய வார்த்தையைப் பெறும்போது, கர்த்தர் நமக்கு பலனளிக்கிறார்.

இரண்டாவதாக, நாம் கர்த்தரை நம்பி, அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, மிகவும் கடினமான காலங்களிலும் அவர் நமக்கு பலனளிப்பார். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபிரெயர் 11:6) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, நீங்கள் கர்த்தரை நம்பினால், அவர் பிரச்சனைகளிலிருந்து உங்களை வெளியே கொண்டு வருவார். உங்கள் நம்பிக்கைக்கு பலன் கிடைக்கும். பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுதலையாக்க இயேசு உங்களுக்காக விலை கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய பரிசுத்த ஆவியானவர் உங்களையும் உங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுதலைப்பெற எழுப்புவார் என்று நீங்கள் விசுவாசித்தால், கர்த்தரிடமிருந்து உங்கள் பலனை பெறுவீர்கள். கர்த்தர் தாமே உங்கள் பலனாயிருப்பார்.
இறுதியாக, லூக்கா 6:38-ன்படி, உங்கள் தேவைகளுக்கு மத்தியிலும், நீங்கள் உதாரத்துவமாய் கர்த்தருடைய பணிக்கும் ஊழியத்திற்கும் காணிக்கைகளை கொடுக்கும்போது, தேவனுடைய பலன் உங்களிடத்தில் வரும். உங்கள்மீது ஆசீர்வாதங்களை ஊற்றுவதற்கு அவர் ஜனங்களை அனுப்புவார். கர்த்தர் உங்களுக்கு இந்த பலனை வழங்குவார். மேலும் இயேசுவிலுள்ள இந்த பலன்கள் அனைத்தும் உங்கள் பலனாகவும், உங்கள் கேடகமாகவும் இருக்கட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,
இந்த அழகான வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, நீரே என்னுடைய மிகப்பெரிய பலனாயிருந்தருளும். என்னை ஆசீர்வதித்து என்னை பெலப்படுத்தும். என்னைப் பாதுகாத்து என் கேடகமாயிரும். உமது மகிமைக்காக என் விசுவாசம் மென்மேலும் பெலப்படட்டும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.