Loading...

சத்துருக்களும் உங்களோடே சமாதானமாவார்கள்!

Samuel Dhinakaran
14 Oct
“ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதிமொழிகள் 16:7).
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்; உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன் (ஆதியாகமம் 12:3) என்று ஆபிரகாமுக்கு தேவன் வாக்கருளினார். தேவன் ஆபிரகாமின் சம்பத்துக்கள் எல்லாவற்றையும் வேலியடைத்திருந்தார்.  ஆம், எந்தவொரு சாபமும் ஆபிரகாமை தொடமுடியவில்லை.  ஆண்டவர் அமைத்திருந்த வேலியை தாண்டி சாபங்கள் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஆபிரகாமைப்போலவே நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சாபம் உங்களை ஒருபோதும் தொடுவதில்லை. ஆசீர்வாதம் மட்டுமே உங்களை பின்தொடரும்.
“ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதிமொழிகள் 16:7) என்று வேதம் கூறுகிறது. ஒரு எதிரியும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை. பிசாசு உங்கள் கவனத்தை திசைதிருப்பும்படி உங்கள் எதிரிகள் மூலமாக தொடர்ந்து முயற்சித்து கொண்டேயிருப்பான். ஆனால், அவனால் உங்களை தொடமுடியாது. கடைசியாக, இந்த மனிதனை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்படி இவனை எதிர்ப்பது என்று உங்களோடே சமாதானம் பண்ணிக்கொள்வார்கள். அவர்கள் உங்களுக்கு சமாதானம் உண்டாகும்படி காணப்படுவார்கள். ஆம், உங்கள் வழிகள் தேவனுக்கு பிரியமாயிருந்தால், கர்த்தரே இதை உங்களுக்கு செய்துமுடிப்பார்.
 
ஆபிரகாமுடைய வாழ்க்கையைப் பாருங்கள். இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றால் ஆபிரகாமுக்காக ஒரு மண்டபம் இருப்பதை காணமுடியும். அந்த மண்டபத்தை காண வெவ்வேறு இடங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். அரபு தேசத்திலுள்ள மக்களும், யூத ஜனங்களும்கூட அங்கு வருவார்கள். அவர்கள் அங்கு வந்து “எங்கள் தகப்பனாகிய ஆபிரகாமே எங்களை இரட்சியும்” என்று கூப்பிடுவார்கள். யூதர்களும் அங்கு வந்து, “எங்கள் தகப்பனே எங்களை இரட்சியும்” என்று சொல்லுவார்கள். நாமும்கூட ஆபிரகாமை, “விசுவாசிகளின் தகப்பனே” என்று அழைக்கிறோம்.  அங்கு வருகிற ஒவ்வொருவரும் அவரை ‘தகப்பனே’ என்று தான் அழைக்கின்றனர். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். பொதுவாக யூத ஜனங்களும், அரபு மக்களும் ஒருவருக்கொருவர் எதிராய் சண்டையிட்டு கொள்வார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஆபிரகாமை தகப்பனாக ஏற்றுக்கொண்டு அவரை மிகவும் நேசித்தனர்.
ஆபிரகாமை தங்கள் தகப்பனாக நினைத்து அனைவரும் நேசித்ததுபோல, உங்களையும் நேசிக்கும்படி கர்த்தர் கிருபை செய்வார். உங்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார். உங்களையும் ஒரு தாயாகவும் தகப்பனாகவும் உயர்த்தி மகிமைப்படுத்துவார். நீங்கள் ஆண்டவரை உண்மையாய் தேடும்போது அவர் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற எதிரிகளும் உங்களோடே சமாதானமாகும்படி செய்வார். ஆகவே, உங்கள் எதிரிகளை நினைத்து கவலைப்படாதிருங்கள்! ஆண்டவர் உங்களுக்கு இளைப்பாறுதலை கட்டளையிடுவார்.
Prayer:
என் அன்பிற்குரிய தகப்பனே,

நான் என்றும் உமக்கு கீழ்ப்படிந்து நடந்து, உமக்குப் பிரியமான பிள்ளையாயிருக்க உதவி செய்தருளும். இனிமேல் என்னுடைய சத்துருக்கள் என்னைத் தொடர்ந்து பிடிக்காதபடிக்கு, உம்முடைய தெய்வீக பாதுகாப்பு என்னோடிருக்கும்படி அருள்புரிந்தருளும். உம் சிறகுகளின் நிழலில் எந்நாளும் என்னை மறைத்து, அரவணைத்தருளும். உம்மையே நம்பியிருக்கிறேன். உம்முடைய தெய்வீக சமாதானத்தை எனக்கு நிறைவாக அருளிச் செய்தருள வேண்டுமென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், பிதாவே.

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000