Loading...
Dr. Paul Dhinakaran

நீங்கள் செழிப்பீர்கள்!

Dr. Paul Dhinakaran
01 Aug
பிரியமான நண்பர்களே, இம்மாதம் உங்களுடைய வாழ்வில் ஆசீர்வாதமாயிருப்பதாக! கர்த்தர் உங்களை எல்லா தீங்கிலிருந்தும் பாதுகாப்பாராக. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு தகுதியுடையவர். ஏனெனில் நீங்கள் அவருடைய அன்பு பிள்ளைகள். உங்களுக்கு எதிராக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காது (ஏசாயா 54:17). நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (1 பேதுரு 2:9).

இந்த மாதம் மிகவும் சிறப்புமிக்க மாதமாகும். ஏனெனில் ஆகஸ்ட் 12, 1983ம் ஆண்டு, எனது தகப்பனார் முதல் ஜெபகோபுரத்தை நிறுவினார். இப்போது 37 ஆண்டுகளாகிறது. ஜெபகோபுர ஊழியத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டுள்ளது. எனது தகப்பனார் மரிக்கும்போது 15 ஜெபகோபுரங்கள் இருந்தன. இன்று உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஜெபகோபுரங்கள் உள்ளன. இந்த 37 ஆண்டுகளில் ஜெபகோபுர ஊழியத்தை ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் உதாரத்துவமான உதவிகளை ஊழியத்திற்கு அனுப்பியதற்கும், எங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கும் தேவனை நன்றியோடு துதிக்கிறேன். முழு இருதயத்தோடு நீங்கள் தேவனை தேடினால் அவர் உங்களை செழிப்பாக்குவார் என்றும் உங்கள் சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டு வருவார் என்றும் கர்த்தர் இன்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். உங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கொடுக்கவும், செழிப்பான நாட்களால் நிரப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை, நீங்கள் இன்று கட்டப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்களா? “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்” (யாக்கோபு 4:17) என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறதுபோல, நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்வேன். 
கர்த்தரின் கரம் உங்களோடுகூட இருக்கிறது. அவர் உங்களுக்கு இரண்டத்தனையான ஆசீர்வாதத்தை கொடுப்பார். அவர் நல்ல திட்டங்களை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவார்.  “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13). நீங்கள் வாஞ்சையோடு தேவனை தேடும்போது, அவர் உங்கள் ஜெபத்தை கேட்பார். அதிகாலையில் அவரை நோக்கிக் கூப்பிட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அதிகாலையில் மட்டுமல்ல, உங்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவரையே நோக்கிப்பாருங்கள். தேவனை நீங்கள் எப்பொழுதும் முதல் இடத்தில் வைத்திருக்க வேண்டும். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று இயேசு கூறியிருக்கிறார். என் தந்தையின் மூலம் பரிசுத்த ஆவியானவர் கோடிக்கணக்கான ஜனங்களை தொட்டார். அவர் அதிகாலையில் வேதத்தை வாசித்து, “ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டுமென்று” ஜெபிப்பார். அப்படியாக ஏழு ஆண்டுகள் அவர் ஊக்கமாய் ஜெபித்து வந்தார். தேவன் என் தகப்பனாருடைய தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும்,  தேவனை காணவேண்டுமென்ற வாஞ்சை அவருக்குள் பெருகியது. ஏழாம் ஆண்டில் ஒருநாள் இயேசு அவருக்கு முன்பாக தோன்றி ஆவிக்குரிய வரங்களை கொடுத்து ஆசீர்வதித்தார். நீங்களும் தேவனைத்தேடும்போது அவரைக் காண்பீர்கள். உங்கள் வாழ்வில் அவருடைய திட்டங்கள் நிறைவேறும். 
Prayer:
அன்பின் தேவனே,

நான் உம்மை நேசிக்கிறேன், நீர் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன். எல்லாவற்றையும் விட நீர் எனக்கு மிகவும் முக்கியம். தொடர்ந்து உம்மைத்தேட எனக்கு உதவும். நான் உம்முடனே நெருக்கமான உறவை வைத்திருக்கிறேன். உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி என் வாழ்வை மாற்றும். உமது விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு உதவும். எனக்கான உமது திட்டம் நோக்கம் நிறைவேறட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000