Loading...
Samuel Paul Dhinakaran

ஒன்றிலும் குறைவுபட மாட்டீர்கள்

Samuel Dhinakaran
20 Jan
அன்பு நண்பரே, இன்றைய வாக்குத்தத்தம் சங்கீதம் 34:10-ல் உள்ளது. இந்த வசனம், "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது"  என்று கூறுகிறது. ஆம், தேவன் உங்களுக்குக் கொடுக்கும் பெரிய நன்மையின் மூலம் நீங்கள் குறைவுபடமாட்டீர்கள். இந்த நன்மைகள்  பஞ்சக்காலத்திலும், பற்றாக்குறை நேரத்திலும் சூழ்நிலைகளின் மத்தியிலும் துளிர்விடும். அவர்கள் மத்தியில், தேவன் தமது மகிமையைக் காணப்போகிறார். உங்கள் குறைவிலிருந்து  நன்மையான காரியங்கள்  வெளிவருவதை நீங்கள் காணப்போகிறீர்கள்.
 
ஒருவேளை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் இதுவரை தங்களுடைய சுய பெலத்தை குறித்து பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கலாம். அவர்களுடைய  அறிவு, திறமை அல்லது ஞானத்தை குறித்து  பெருமைப்படுத்தினாலும், பிரச்சனைகள்  மற்றும் பற்றாக்குறை காலங்களில், அவர்களுடைய  மகத்துவங்கள் அனைத்தும்  வீழ்ச்சியடையும். உங்கள் வாழ்வில் தேவன் தமது மகத்துவத்தைக் காண்பிக்க இதுவே ஏற்ற தருணமாகும். நீங்கள் பொறுமையாக இருந்தீர்கள் நண்பரே. உங்களை சுற்றியிருக்கும்  இந்த குறைவுகளுக்கு மத்தியில், கர்த்தரிடமிருந்து ஒரு நன்மை வருவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே உங்களிடம் உள்ள சிறிதளவை ஆண்டவரிடம் கொண்டு வாருங்கள்.
ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொடுக்கும்படி உங்களிடத்தில் உள்ளதை கொண்டு வாருங்கள். வேதத்தில்  ஒரு சிறுவன் இதைத்தான் செய்தான். ஆண்டவருடைய பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஜனங்கள்  பசியுடன் இருந்தனர். இயேசு அவர்களுக்கு உணவளிக்க விரும்பினார், ஆனால், அவ்விடத்தில் போதுமான உணவு இல்லை. கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு வந்து இயேசுவிடம் கொடுத்தான். இயேசு அதை ஆசீர்வதித்தார், அது ஆயிரமாகப் பெருகியது. கர்த்தர் உங்களுக்கும் இதையே செய்வார்! நீங்கள் கொண்டு வரும் சிறியதை அவர் ஆசீர்வதித்து அதை ஆயிரமாக பெருக்குவார். அது உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கப் போகிறது.  தங்கள் வல்லமையைக் குறித்து தற்பெருமை கொண்டவர்களும் கூட, தேவன்  உங்கள் மூலம் என்ன செய்கிறார் என்பதை காண்பார்கள். அவர்கள் உங்கள் மூலம் தேவனுடைய பலத்தை அறியப்போகிறார்கள். இந்த நல்ல காரியத்திற்கு ஆயத்தமாகுங்கள். நண்பரே. நீங்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது.
Prayer:
என் அன்பான பரலோகத் தந்தையே,
 
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. தகப்பனே, என்னிடம் உள்ள சிறியதை நான் உம்மிடத்தில் கொண்டு வருகிறேன். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து பெருக்கியது போல, என்னுடைய சிறிய விசுவாசம், ஏற்பாடு, திறமை, நிதி ஆகியவற்றை ஆசீர்வதித்து அவற்றைப் பெருகச் செய்வீராக.  நீர் தரும் ஆசீர்வாதங்களால் உமது நாமம் மகிமைப்படட்டும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000