Loading...
Stella ramola

நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள்!

Sis. Stella Dhinakaran
30 May
அன்பு  நண்பரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று தேவன் ஏசாயா 59:1-ல் காணப்படுகிற வசனத்தோடு உங்களோடு பேசுகிறார், “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.” ராஜாவாகிய தாவீதுக்கு இந்த அனுபவம் கிடைத்தது. சங்கீதம் 27:1-ல், “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?" என்று கூறுகிறார்.
 
அவர் வாலிப பருவத்தில் இருந்தபோது, கர்த்தர் அவரது இருதயத்தை தொட்டு அவருக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்தார். யாத்திராகமம் 15:2-ஐ நீங்கள் வாசித்தால், “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்."  மோசேயும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை ருசித்ததால், கர்த்தரை துதித்தார்கள். அவர்கள் செங்கடலைக் கடக்க வேண்டிய நேரம் வந்தபோது, ​​​​மோசே தன் கரத்தை நீட்டினார், கர்த்தர் அவர்களுக்காக செங்கடலை இரண்டாக பிரித்தார்.
இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்து சென்றபோதும் கர்த்தர் அவர்களுக்கு ஒரு அற்புதம் செய்தார்.  இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை துதித்து பாடிக்கொண்டிருந்தபோதே எகிப்தியர் கடலில் மூழ்கி போனார்கள். உங்களுக்கும் ஒரு அதிசயம் தேவைப்படலாம். தேவனிடத்தில் கேளுங்கள். அவர் உங்களுக்காக பெரிய காரியங்களைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். இயேசுவின் பாதுகாக்கும் கரம் உங்களை விடுவிக்கும். யாக்கோபு 5:15-ல், “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்" என்று வாசிக்கிறோம். இந்த வார்த்தையின்படியே கர்த்தர் உங்களை இரட்சிப்பார். நீங்கள் எப்படிப்பட்ட வியாதியிலிருந்தாலும் குணமடைவீர்கள். எல்லா பாவங்களிலிருந்தும் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இன்று இரட்சிப்பின் நாள். கர்த்தரை நோக்கிப் பாருங்கள். உங்கள் இருதயத்தை அவருக்கு ஒப்புக்கொடுங்கள். இன்று உங்கள் வாழ்வில் ஒரு அதிசயத்தைக் காண்பீர்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
இந்த பெரிய வாக்குறுதிக்கு நன்றி. என் நிலைமையை நீர் அறிந்திருப்பதற்காக நன்றி. இன்று உம்முடைய கரத்திலிருந்து ஒரு அதிசயத்தை நான் காணட்டும். என் அன்புக்குரியவர்களை இப்போதே இரட்சியும். என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மகிமைப்படுத்துவேன். உமது நாமம் மகிமைப்படட்டும் .
 
இயேசுவின்  நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000