Loading...
Dr. Paul Dhinakaran

கிறிஸ்துவுக்காக வேறுபிரிக்கப்பட்டவர்கள்!

Dr. Paul Dhinakaran
04 Jun
நீதியின் பொருள் “கிறிஸ்துவால் நீதிமானாக்கப்பட்டவர்.” மேற்குறிப்பிட்டுள்ள வசனத்தின் அர்த்தம்,  நாம் தெய்வ நம்பிக்கையற்றவர்களுடன் இணையாமலும், தேவனுக்கு பிரியமில்லாத வழிகளிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வதுமே ஆகும். தேவனுடைய வழியிலிருந்து விலகுவதும், நம்முடைய ஆன்மீக வாழ்வின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என்று அப்போஸ்தலனாகிய பவுல்,  கொரிந்து சபையோரை எச்சரிக்கிறார். தேவனால் வேறுபிரிக்கப்பட்டிருக்கிற நாம், அழிந்துபோகிற இவ்வுலக காரியங்களோடு ஒன்றிப்போவது தேவனுக்கு பிரியமல்லாதது.

தேவன் தாவீதுக்கு சாலொமோனின் பிறப்பை முன்னறிவித்தார். தாவீதுக்கு அநேக பிள்ளைகள் உண்டு. ஆனால், சாலொமோன் அவர்கள் எல்லாரிலும் தனித்தன்மையுடையவன். தேவன் அவனுக்கு ஒப்பில்லாத ஞானத்தை கொடுத்தார். பூமியிலுள்ள எந்த ராஜாவுக்கும் இல்லாத செல்வமும், ஞானமும் அவனுக்கு இருந்தது. ஆனால், காலப்போக்கில் அவன் தேவனுடைய கட்டளையை மீறி அந்நிய பெண்களை விவாகம் செய்தான். அவர்கள் அவனுடைய இருதயத்தை, அந்நிய தேவர்களைச் சார்ந்துகொள்ளும்படி செய்தார்கள். ஜீவனுள்ள தேவனின் அன்பை மறந்தான். தேவனின் எச்சரிப்பை அலட்சியம்பண்ணி, இறுதியில் தேவ மகிமையை இழந்தான்.
சாலொமோனைப்போல நீங்களும் உலகப்பிரகாரமான கல்லூரி மற்றும் வேலை ஸ்தலத்திலுள்ள உலக நண்பர்களைப் பின்பற்றிப் போகிறீர்களா? உங்களது நண்பர் தவறான வழியில் சென்றால், நீங்களும் வேடிக்கைக்காக, அதே வழியில் செல்கிறீர்களா? நீங்கள் எப்படிப்பட்ட மனுஷர்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். இவ்வுலகில் உங்களைச் சூழ்ந்திருக்கும் தீய எண்ணங்களையும், பாவங்களையும் உங்களால் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் மனதில் அவைகள் நுழைய அனுமதிக்காததன் மூலம் அவைகள் உங்கள் வாழ்வில் வேரூன்றாமல் தடுக்கலாம். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இயேசுவையும் உலகத்தையும் சம்பந்தப்படுத்த முடியாது என்பதில் தீவிரமாக இருங்கள். அவர் ஒரு வித்தியாசத்தை உங்களில் எதிர்பார்க்கிறார். அவர் காண்பிக்கும் வெளிச்சத்தில் நடந்து அவர் அருளும் ஆசீர்வாதங்களை நாம் அனைவரும் கர்த்தரின் கிருபையால் முழுமையாய் பெற்றுக்கொள்வோம்.
Prayer:
என்னை அதிகமாய் நேசிக்கிற அன்பின் தகப்பனே, 

அந்நிய நுகத்தில் அவிசுவாசியோடே நான் பிணைக்கப்பட கூடாது என்று அறிவேன். உமது ஞானத்தைத் தந்து என்னை வழிநடத்தும். இவ்வுலக இச்சைகளில் விழுந்துபோகாமல், எல்லா தீமைகளினின்றும் என்னை பாதுகாத்தருளும். உமது வார்த்தை என் பாதைக்கு வெளிச்சத்தைத் தந்து, என்னை நீதியின் பாதையில் நடத்தட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000