Loading...
Dr. Paul Dhinakaran

நீங்கள் தேவனுடைய சொத்து!

Dr. Paul Dhinakaran
12 Dec
“உலகின் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், தண்டனையிலிருந்து நம்மை மீட்பதற்காக தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் ஜீவனையே விலையாக செலுத்தியிருக்கிறார்” என்று சொல்லும்போது நம் இருதயம் மகிழுகிறது அல்லவா. கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வது என்பது தார்மீக கடமையோ அல்லது பாரம்பரிய வழக்கமோ அல்ல. மாறாக, ஆவி, ஆத்துமா, சரீரத்தில் நாம் அனுபவிக்கும் விடுதலையே.

ஒருநாள் ஆபிரகாம் லிங்கன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு அவர், ஒரு வாலிபப் பெண்ணை அடிமையாக விற்பதையும், அவள் மிகவும் மனங்கசந்து அழுவதையும் பார்த்த லிங்கனின் உள்ளம் அவளுக்காக பரிதபித்தது. அவர் விலை கொடுத்து அவளை வாங்கினார். அவர் அவளை வீட்டிற்கு அழைத்துவந்து, அவளை தான் விடுவிப்பதாகவும், அவள் இஷ்டப்படி எங்கும் வாழ அவளை அனுப்பி விடுவதாகவும் கூறினார். அந்தப் பெண்ணுக்கு ஒரே அதிர்ச்சி. அவள் அவரது காலில் விழுந்து, அவர் உண்மையிலேயே அவளை விடுவித்ததால், தான் அவருக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்யும் சுதந்திரத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டுமென்று கேட்டாள். அப்பொழுதிலிருந்து அவள் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானாள். அதிக அன்போடுகூட அவருக்கு சேவை செய்தாள்.

பிரியமானவர்களே, பிசாசின் அடிமைத்தனத்தில் நீங்கள் இருந்தபொழுது, இயேசு கிறிஸ்து உங்களை விடுவித்தார். அவர் தனது சொந்த விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டிருக்கிறார். “கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:20).
ஆம், தமது மக்களை பாவத்திலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் மீட்பதற்காக தேவன் தமது ஒரே பேறான குமாரனுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தையே கிரயமாகக் கொடுத்து உங்களை வாங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, உங்களை வியாதியினின்றும், சாபத்திலிருந்தும், பாவத்தின் பிடியிலிருந்தும் விடுதலை செய்திருக்கிறார். “நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்” (1 கொரிந்தியர் 7:23) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் கிரயமாக கொள்ளப்பட்டதால், உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் தேவனுக்கு சொந்தமானது. அளவற்ற சந்தோஷடத்துடனும் சமாதானத்துடனும் வாழும்படி நீங்கள் விடுதலையாக்கப்பட்டுள்ளீர்கள். பரிசுத்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து தேவநாமத்தை கனப்படுத்துங்கள். 
Prayer:

என் அன்பு தகப்பனே,

உம்முடைய பரிசுத்த இரத்தத்தைச் சிந்தினீரே உமக்கு நன்றி. உமது இரத்தத்தினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டேன். நான் பிசாசின் இராஜ்ஜியத்திலிருந்து விடுதலையானேன். இந்த வெளிச்சமானது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வீசக்கடவது. அநேகரை இரட்சிப்பிற்குள்ளாக நடத்த உதவிச்செய்யும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000