உங்கள் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்
Samuel Dhinakaran
24 May
என் அன்பு நண்பரே, என் பாட்டியின் பிறந்தநாளான இன்று, தேவனுடைய வாக்குறுதியை உங்களுடன் தியானிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்காக ஜெபித்ததற்கு மிகவும் நன்றி. கர்த்தர் அவர்களை அநேகருக்கு பெரிய ஆசீர்வாதமாக வைத்துள்ளார். இன்றைய வாக்குத்தத்தம் அவர்கள் வாழ்வில் தேவன் செய்த காரியங்களை வெளிப்படுத்துகிறது. நீதிமொழிகள் 9:11-ன் படி, தேவன் அவர்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். "என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்" என்று தேவன் கூறுகிறார்.
இது எவ்வளவு பெரிய அற்புதம்! தேவனுடைய ஞானத்தால், உங்கள் வாழ்வில் ஆயுசு நாட்கள் எவ்வாறு பெருகும்? நீதிமொழிகள் 1:7-ல் "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று வேதம் கூறுகிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பதை நாமும் அறிந்திருக்கிறோம். உலகமெங்கும் பாவம் பெருகியிருந்த காலத்திலும் நோவா தனது வாழ்க்கையில் என்ன செய்தார் என்பதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் தேவனுக்கு பயந்தவர்களாக வாழ்ந்தனர். தேவனுடைய பார்வையில் சரியானதை மட்டுமே செய்தனர். மேலும், தேவன் வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பித்து கொள்வதற்கான வழியை அவர்களுக்கு காட்டினார். தேவஞானம் வெளிப்பட்டது. நோவா தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் ஒரு பெரிய பேழையைக் கட்டினார். மேலும், உலகத்தைக் அழித்த பெருமழையிலிருந்து நோவாவும் அவரது குடும்பத்தினரும் தப்பித்தனர். அவருடைய ஆயுசு நாட்கள் பாதுகாக்கப்பட்டது. புதிய உலகத்திற்காக தேவன் அவர்களிடமிருந்து ஒரு தெய்வீக தலைமுறையை உருவாக்கினார். என் நண்பரே, இது உங்கள் வாழ்விலும் நடக்கும். தேவன் உங்களை முழு இருதயத்துடன் ஆசீர்வதிப்பார். இதனால் நீங்கள் தேவனுடைய பல ஆசீர்வாதங்களை பெறலாம்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. ஆம், பணப் பேராசையின் காரணமாக யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இது அவனது இருதயத்தைக சாகடித்தது. அந்த வேதனையை தாங்க முடியாமல் அவன் மரித்துப்போனான். இதைத்தான் உலகம் நம்மையும் செய்ய வைக்கிறது. ஆனாலும், தேவன் இன்று உங்களைப்பார்த்து கூறுகிறார், "என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்." மேலும் நான் கொடுக்கும் ஆயுசு விருத்தியின் மூலம் என்னை துதிக்கும் ஜனங்களையும் ஆசீர்வாதமான தலைமுறைகளையும் உருவாக்க உங்களைப் பயன்படுத்துவேன். ‘உன் எதிர்காலம் இப்படித்தான் அமையும்!’ என்று ஆண்டவர் கூறுகிறார். அவரைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். தேவன் இந்த கிருபைகளை உங்களுக்கும் தருவாராக.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
இன்றைய வாக்குறுதிக்காக உமக்கு நன்றி. அப்பா, எனக்கு தேவபயமுள்ள ஆவியை தந்தருளும். உமது தெய்வீக ஞானத்தால் என்னை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக மாற்றும். உமது நாமத்திற்கு மகிமையை ஏற்படுத்த கிருபை செய்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.