Loading...
Stella dhinakaran

கொடுப்பதே ஆசீர்வாதம்!

Sis. Stella Dhinakaran
09 Jan
உலகின் தத்துவம் என்னவென்றால், “மற்றவர்களிடமிருந்து பதுக்கி வைப்பதன் மூலமும், எடுத்துக்கொள்வதன் மூலமும் செல்வந்தர்களாகிறார்கள்.” இது வேதம் கூறுவதற்கு மாறாக உள்ளது அல்லவா! “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்கா 6:38). ஹோலோகாஸ்டில் பாதிக்கப்பட்ட யூதரான ஆனி பிராங்க் கூறுகையில், “கொடுப்பதன் மூலம் இதுவரை யாரும் ஏழையானதில்லை. மகிழ்ச்சியான தருணங்கள் வாங்குவதில் இல்லை, கொடுப்பதில் தான் இருக்கிறது.  தேவன் உங்களை வழிநடத்துகிறபடி இந்த ஆண்டு மற்றவருக்கு ஆசீர்வாதமாயிருக்க ‘கொடுப்பதை’ வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வறுமையின் வழியாக கடந்து வரும்போது, என்னிடத்தில் மூன்று புடவைகள் மட்டுமே இருந்தன. அதுவும் அது கிழிந்து ஒட்டுப்போட்டிருக்கும். ஆனால் நான் அதற்காக கவலைப்பட்டதில்லை. என் கணவருடைய கவனித்திற்கு வராமல், அவற்றை நான் நன்றாக சுத்தம் செய்து நேர்த்தியாக வைத்திருப்பேன். மனத்தாழ்மையுடன் ஆண்டவருக்கு நான் சேவை செய்து வந்தேன். தேவ அழைப்பை ஒருபோதும் கைவிட்டதில்லை. நான் அவரை உண்மையாய் பின்பற்றினேன். எந்தவொரு குறையும் கூறாமல் அவருடைய ஊழியத்தைச் உண்மையாய் செய்கிறேனா என்று கர்த்தர் என்னை சோதிக்க விரும்பினார். பொறுமையுடனும் உண்மையுடனும் அவரை பின்பற்றிய எங்களை, கர்த்தர் படிப்படியாக வறுமையிலிருந்து உயர்த்தினார். வறுமையில் வாடுகிற தேவனுடைய அடியார் பலருக்கு உதவி செய்ய இன்று எங்களை அவர் ஆசீர்வதித்திருக்கிறார். அநேக வெளி ஊழியங்களுக்கும், தேவையிலுள்ள தேவ பிள்ளைகளுக்கும், நாங்கள் பெற்ற காணிக்கையிலிருந்து தசமபாகம் கொடுக்கும்படி கர்த்தர் எங்களை உயர்த்தியிருக்கிறார். 

பிரியமானவர்களே, கொடுப்பவர்களாக இருக்க இன்றைக்கு முடிவு செய்யுங்கள். சிறிய பிரச்சினைகளுக்காக தேவன் உங்களிடத்தில் ஒப்படைத்த ஊழியத்தை விட்டுவிடாதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் தேவன் கவனித்து வருகிறார். தேவனுக்கு ஊழியம் செய்யவோ அல்லது தேவையிலுள்ளவர்களுக்கு உதவவோ உங்களுக்கு திராணியிருக்கும்போது உடனடியாக அதைச் செய்யுங்கள். “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” (நீதிமொழிகள் 3:27). கொடுப்பதன் மகிழ்ச்சியைப் பற்றி ஆழமாக ஆராய்ந்த பரிசுத்த பவுல் ஒரு அழகான அறிக்கையை அளிக்கிறார். “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7,8). உங்கள் நிதியை நிர்வகிக்கும் தேவனுடைய வல்லமையை நம்புங்கள். நிச்சயமாகவே உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும். 

Prayer:

அன்புள்ள ஆண்டவரே,

வருமானம் சம்பாதிக்கும்படி நீங்கள் எனக்குக் கொடுத்த வலிமைக்கும் ஞானத்திற்கும் நன்றி. என்னிடம் இருப்பவை யாவும் நீர் எனக்கு கொடுத்தது. உம்மை நோக்கிப்பார்க்கும் எனக்கு நன்றியுள்ள இருதயத்தை தந்தருளும். தாராளமாக கொடுக்கிற விசுவாச இருதயத்தை எனக்குத் தந்தருளும். நீர் எனக்காக நிர்ணயித்திருக்கும் ஒவ்வொரு நற்செயலிலும் நான் பெருக எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000