Loading...
Stella dhinakaran

உண்மையாய் நடந்திடுங்கள்

Sis. Stella Dhinakaran
18 Oct
எனக்கு அருமையான நண்பரே, கர்ததராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றும், சங்கீதம் 84:11ம் வசனத்தை தியானிப்போம். "தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்" தேவன் நீதியான வாழ்க்கையை நேசிக்கிறார் என்று நாம் வாசிக்கிறோம். "நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்" (நீதிமொழிகள் 20:7). உத்தமமாய் நடக்கிற மனிதன் நீதிமான் என்று அழைக்கப்படுகிறான்.  அன்பு நண்பரே, இப்பொழுதும் உங்கள் வாழ்க்கையை சோதித்துப்பாருங்கள். நீங்கள் தேவனுக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறீர்களா?

நீதிமொழிகள் 11:3ல் வாசிக்கிறோம், "செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்." நீங்கள் செம்மையான வழியிலே நடந்தால், கர்த்தர் உங்களைக்குறித்து மகிழ்ச்சியடைவார். மேலும், அவர் உங்களை நீதியின் பாதையிலே வழிநடத்துவார். இது தான் வெற்றிக்கான இரகசியம். யோபு 1:1ல், "ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." யோபு உத்தமமாயும், நீதிமானாயும் நடந்தான். அவன் தனது வாழ்க்கையில் அநேக பிரச்சினைகளை சந்தித்தான். தன் பிள்ளைகளை இழந்தான், சரீர சுகத்தை இழந்தான், சமாதானத்தை இழந்தான். ஆனால் தேவ கண்களில் அவனுக்கு கிருபை கிடைத்தபடியினால் அவன் இழந்த எல்லாவற்றையும் இரட்டத்தனையாக மீட்டுக்கொண்டதுடன் 140 வருடம் உயிரோடிருந்தான். அவன் நான்காம் தலைமுறை மட்டும் தன் பிள்ளைகளின் பிள்ளைகளை கண்டான். 
எசேக்கியா ராஜாவைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். அவர் நேர்மையுடன் நடந்துகொண்ட ஒரு நீதியுள்ள மனிதன். ஆனால் கர்த்தர் எசேக்கியாவிடம் நீ மரித்துப்போவாய், உன் வீட்டு காரியத்தை ஒழுங்குப்படுத்து என்று கூறினார். எசேக்கியா கர்த்தரிடம், அடியேன் தேவனுக்கு முன்பாக மனஉத்தமமாய் நடந்தேன். அவருடைய நற்செயல்களை நினைவில் வைத்து அவருக்கு ஜீவனைக் கொடுக்கும்படி சுவர்புறமாக திரும்பிக்கொண்டு அழுதார். கர்த்தரும் அவர் உண்மையை நினைத்து 15 வருடங்கள் அவருக்கு ஆயுசு நாட்களை நீட்டித்து ஆசீர்வதித்தார். அதனால் இந்த பூமியில் அவருடைய வாழ்நாட்கள் நீடித்திருந்தது. "என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்" (சங்கீதம் 41:11,12) என்று தாவீது கூறுகிறான். நீங்கள் உண்மையாய் நடக்கும்போது, வியாதி, துக்கம் போன்ற கஷ்டங்கள் உங்களை ஒருபோதும் தொடமுடியாது. ஆகவே, இன்று முதல் கர்த்தருக்கும் மனிதருக்கும் முன்பாக உண்மையாயிருக்கும்படி அவர் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்துவார்.
Prayer:
அப்பா பிதாவே,

உமக்கும், மனிதர்களுக்கும் முன்பாக உண்மையாய் நடக்க அருள்புரியும். உமது தூய இரத்தத்தால் என்னை கழுவி சுத்திகரியும். என் இருதயத்தை மாற்றி நீதியான வாழ்க்கை வாழ கிருபை செய்தருளும். உம்மை பிரியப்படுத்துகிற வழியில் நடக்கும்படி என்னை போதித்து நடத்தும். யோபு ஆசீர்வதித்ததுபோல என்னையும் ஆசீர்வதித்து நீண்ட ஆயுளையும், ஆசீர்வாதமான வாழ்க்கையையும் வாழ கிருபை தாரும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000