Loading...
Evangeline Paul Dhinakaran

தேவ சமயத்திற்காக காத்திருங்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
08 Jun
நம்முடைய ஜெபமும், வாழ்க்கையும் இயேசுவையும் அவருடைய சித்தத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கட்டும். அப்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்திற்கும் நாம் பதிலை பெற்றுக்கொள்வோம். நம் பிரார்த்தனைக்கான பதிலை பெற்றுக்கொள்வோம் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். ஜெபம் என்பது நாம் கேட்பதை பெற்றுகொள்வது மாத்திரமல்ல, தேவன் நம்முடைய பிரார்த்தனைக்கு கொடுக்கின்ற பதிலாகும். நாம் ஜெபத்தில் கேட்பவைகளுக்கு, தேவன் சிலநேரத்தில் ‘ஆம்’ என்றும், சில நேரத்தில் ‘இல்லை’ என்றும், சில நேரங்களில் ‘தாமதித்தும்’ பதில் தருகிறார். ஆனால், நிச்சயமாக நம்முடைய பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார். அவிசுவாசம் நம்முடைய ஜெபங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது (யாக்கோபு 1:6). நாம் தேவனுடைய கிரியைகளை மனப்பூர்வமாய் நம்ப வேண்டும். “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:6) என்று வேதம் கூறுகிறது.

ஜெயலட்சுமி என்ற ஒரு சகோதரியினுடைய சாட்சியை சமீபத்தில் கேட்டேன். சென்னையிலுள்ள ஜெபகோபுரத்தின் அருகில் அவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இயேசுவை அதிகம் வெறுத்தார்கள். ஆகவே, ஜெபகோபுரத்தை அவர்கள் கடந்துசெல்ல நேரிடும்போதெல்லாம் தலையை வேறுபக்கமாகத் திருப்பிக்கொள்வார்கள். ஆனால், ஒருநாள் கொதிக்கிற எண்ணெயை தவறுதலாக தன் குட்டி மகள் மீது சிதற விட்டுவிட்டார்கள். அதினிமித்தம் மகளுடைய உடம்பெல்லாம் கொப்புளங்கள் வந்துவிட்டது.  அவள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். மருத்துவர்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம். இனி ‘கடவுளால் மட்டுமே உங்கள் மகளுக்கு உதவ இயலும்’ என்று கூறிவிட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த தாதி, ‘இயேசு அழைக்கிறார்’ ஜெபகோபுரத்திற்கு சென்று ஜெபிக்கும்படி கூறினார்கள். அதைக் கேட்டபோது இந்த சகோதரி திடுக்கிட்டுப் போனார்கள். ஆனாலும், அந்த தாதி கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, ஜெபகோபுரத்திற்கு சென்று ஜெபித்தார்கள். ஜெபகோபுரத்தில் ஜெபவீரர்கள் சகோதரி ஜெயலட்சுமியின் மகள் ‘குணம் பெற வேண்டும்’ என்று கண்ணீரோடு ஜெபித்தார்கள். ஒரு பெரிய அற்புதம் நிகழ்ந்தது. ஆண்டவர் எண்ணெயால் வந்த கொப்புளங்களை மட்டும் குணமாக்கவில்லை; தழும்புகளைக்கூட முற்றிலும் மறையச்செய்தார். அந்த சகோதரி மிகுந்த சத்தமாய் ஆண்டவரை ஸ்தோத்திரித்தார்கள்.
ஆம், அற்புதங்களை செய்யும் ஆண்டவரை நாம் சேவிக்கிறோம். இன்று அந்த சகோதரியின் மகள் ஒரு இஞ்ஜினியராக இருக்கிறாள். ஒரு காலத்தில் ஜெபகோபுரத்திற்கு செல்வதை விரும்பாத அந்த சகோதரி, இன்று எந்த பிரச்னை வந்தாலும் ஜெபகோபுரத்திற்கு செல்கிறார்கள். ஆம், ஆண்டவர் அந்த குடும்பத்தை கனப்படுத்தியிருக்கிறார். உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது (ஏசாயா 59:2; யோபு 35:12). குறைவுகளை தேவனிடத்தில் அறிக்கையிடுங்கள். அவர் உங்களுக்கு ஏற்கனவே  கொடுத்திருக்கம் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கேளுங்கள். அவர் ஒருபோதும் உங்கள் ஜெபத்தை நிராகரிக்கமாட்டார். “என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” (சங்கீதம் 66:20) என்று தாவீதைப்போல நீங்களும் நன்றிசொல்வீர்கள். வாக்குறுதி அளித்தவரும், ஆசீர்வாதத்தை அருளுபவருமான நமது இயேசு ராஜாவிடம்  விசுவாசமாய் கேளுங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்!
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

நீர் என் பிரார்த்தனைகளுக்கு ஏற்ற பதிலை தருவீர் என்று நான் விசுவாசிக்கிறேன். எதிர்மறையான சூழ்நிலையின் மத்தியிலும், உம்மை மாத்திரமே நான் நம்பியிருக்க உதவியருளும். என் நம்பிக்கையை விசுவாசத்தை கடைசி வரையிலும் காத்துக்கொள்ள கிருபை தாரும். நீரே ஞானத்திற்கு ஆதாரமாயிருக்கிறீர், என் பிரார்த்தனைக்கு  உடனடியாக நீர் பதிலளிப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000