Loading...
Dr. Paul Dhinakaran

பெலவீனத்தில் பெலப்படுத்தும் கர்த்தர்!

Dr. Paul Dhinakaran
20 Sep
என் விலையேறப்பெற்ற நண்பரே, நீங்கள் தேவனுடைய வாக்குறுதியை தேடுகிறபடியினால், நீங்கள் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றவர்கள். தேவனுடைய வாக்குறுதிகள் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது. தேவன் இன்று உங்களுக்கு மூன்று ஆசீர்வாதங்களை உறுதியளிக்கின்றார். முதலாவதாக, தேவன் உங்களோடு சமாதான உடன்படிக்கை செய்கிறார். “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 54:10). “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவன் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங்கீதம் 16:8) என்று சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார். நீங்களும் கர்த்தரை உங்களுக்கு முன்பாக வைத்தால் அசைக்கப்படமாட்டீர்கள். தேவன் உங்கள் வலது கையைப் பிடித்து இன்று உங்களுக்கு உதவிச்செய்வார் (ஏசாயா 41:13). ஆகவே பயப்படாமல் இருங்கள்.
 
இரண்டாவதாக, உங்கள் பெலவீனத்தில் தேவபெலன் பூரணமாய் விளங்கும். ஏசாயா 41:10ல் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று தேவன் கூறுகிறார். உங்களை பலப்படுத்தும்படி தேவன் உங்களுடனே இருக்கிறார். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிச்செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்” (ரோமர் 8:26). உங்கள பலவீனத்தில் , பரிசுத்த ஆவியானவர் பலமாக இருப்பார். உங்கள் பலவீனங்களை மேற்கொள்ளும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.
மூன்றாவதாக, தேவனுடைய வார்த்தையை நீங்கள் பேசுவதற்காகவே அவர் தமது வார்த்தையை உங்கள் வாயிலே போடுகிறார். “ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரேமியா 1:7-8). தேவனுடைய வார்த்தையைப் நீங்கள் பேசும்போது நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். “பயப்படாதே, உன்னை பலப்படுத்தவும், உங்களுக்கு உதவவும், உங்களை விடுவிக்கவும் நான் உங்களுடன் இருக்கிறேன்.” என்று கூறுகிறார். தேவனை நம்புங்கள். பரிசுத்த ஆவியானவர் அவருடைய பலத்தால் உங்களை நிரப்பும்படி கேளுங்கள். இன்று நீங்கள் அவருக்காக வாழும்போது, அவர் உங்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
Prayer:
அன்பின் தேவனே,

உம்மோடு ஐக்கியமாயிருக்கிற அருளை எனக்குத்தாரும். உமது சமாதான உடன்படிக்கை எப்பொழுதும் என்னோடு இருக்கட்டும். என் பலவீனத்தில் உமது பலன் பூரணமாய் விளங்கட்டும். உமது வார்த்தைகளை நான் அறிவிக்கும் கிருபையை எனக்கு தந்து என்னை அபிஷேகித்தருளும். இயேசுவின் நாமத்தில் எனது பயத்தை நீக்கியருளும். உமது பிரசன்னம் என்னோடு இருக்கட்டும். என்னை பாதுகாத்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000