Loading...

வழியை உருவாக்கும் தேவன்!

Stella Ramola
13 Dec
நமது நோக்கமும், பார்வையும் மிகவும் முக்கியமானது. நோக்கம் சரியில்லாததினால் நாம் அநேக காரியங்களை இழந்துபோகிறோம். தேவன் கூறுகிற ஆலோசனையை நாம் அவமதிக்கும்போது, நம்மையே நாம் தொலைத்துவிடுகிறோம். ஆம், தேவனுடைய வார்த்தையை புறக்கணிப்பது, வாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டும் வரைபடத்தைப் புறக்கணிப்பது போன்றதாகும். அது பேரழிவிற்கு வழிவகுக்கும். தேவனுடைய வார்த்தைகள் உங்கள் பயணத்திற்கான அடையாளம் காட்டும் பலகைகள் போன்றவை. ஆபத்திலிருந்து உங்களை தப்புவிக்கிற  தேவனுடைய  வார்த்தைகளுக்கு எப்போதும் செவிகொடுங்கள். “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தைகளை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21) என்று கர்த்தர் வாக்குருளியபடியே உங்களை வழிநடத்துவார். 

ஸ்மார்ட் போன்கள், நாம் செல்லும் பயணத்தில் நமக்கு வழிகாட்டக்கூடிய  வரைபடங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் செல்ல வேண்டிய ஊரை அதில் டைப் செய்துவிட்டால், நீங்கள் எப்படி செல்ல வேண்டுமென்ற வழியை ஒரு குரல் உங்களுக்கு வழிகாட்டும்.  200 மீட்டரில் நீங்கள் வலது புறமாக திரும்ப வேண்டும். இரண்டாவது ரவுண்டானாவிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டுமென்று அந்த குரல் கூறும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு திருப்பத்தை தவறவிட்டால், அந்த குரல் “மீண்டும் கணக்கிடுகிறது” என்று பணிவுடன் கூறும். இப்படித்தான் நம்முடைய அன்பான தேவனும் நமக்கு வழிகாட்டுகிறார். ஒவ்வொரு காரியத்திலும் அவர் தனது பிள்ளைகள் செல்ல வேண்டிய வழியை கூறுவார். அவர்கள் தவறு செய்தால் அல்லது அவரது வழிகளை புறக்கணித்தால், அவர்களை மன்னித்து மீண்டுமாக அவருடைய பாதையில் சரியாய் நடத்துவார். 
அன்பானவர்களே, உங்கள் வாழ்வில் காணப்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டுமென்று தடுமாறுகிறீர்களா? தேவனுடைய கண்கள் எப்பொழுதும் உங்கள்மீது நோக்கமாயிருக்கிறது. நீங்கள் தேவனடைய பிள்ளையாயிருக்கிறபடியால், உங்களை வெறுக்கிற ஜனங்கள் மத்தியிலும், சோதனைகள் மத்தியிலும் அவர் நீங்கள் நடக்க வேண்டிய பாதையில் உங்களை நடத்துவார்.  உங்கஅவருடைய குழந்தையாகிய உங்களுக்கு ஒரு மகத்தான ஆறுதல் உண்டு. ஆண்டவரை நோக்கிப் பார்த்து, “ஆண்டவரே, நான் கடந்து செல்லும் பாதைகள் அனைத்தையும் நீர் அறிவீர்” என்று சொல்லுங்கள். தேவனுடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவர் உங்கள் பிரச்சினை, உங்கள் கஷ்டம் மற்றும் உங்கள் சுமைகள் யாவற்றையும் அறிந்தவர். ஒருவேளை உங்கள் பள்ளி, கல்லூரி, வேலை அல்லது குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் நீங்கள் சிந்துகிற கண்ணீரை காண்கிறார். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். (சங்கீதம் 32:8) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தின்மீது நம்பிக்கை வைத்திடுங்கள். அவருடைய தெய்வீக வழிகாட்டுதலைப் பெறும்படிக்கு, அவருக்கு முன்பாக தாழ்மையுள்ள இருதயத்துடன் காத்திருங்கள். மகிழ்ச்சியும் வெற்றியுமே உங்கள் இலக்காய் இருப்பதாக!
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,
 
நீரே என் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நான் நம்புகிறேன். “நீரே என் வழி” என்று வேதம் கூறுகிறது. இந்த குழப்பமான சூழ்நிலையில், உமது குரல் எப்பொழுதும் என்னை வழிநடத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இனி என் சுய ஞானத்தினால் எதையும் செய்யாமல், நீர் வழிநடத்துகிறபடி நடக்க உதவும். எனது தவறான முடிவுகளால் நான் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். ஆண்டவரே, எனக்கு முன்னால் சென்று கோணலான வழிகள் எல்லாவற்றையும் செவ்வையாக்கும். உமது குரலை நான் தெளிவாக கேட்கும்படி என்னை காதுகளை பழக்குவித்தருளும். உமது வாரிசாக, உம் சித்தத்தை செய்கிறவனாக என்னை மாற்றும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000