Loading...
Dr. Paul Dhinakaran

பரிபூரண ஞானம்!

Dr. Paul Dhinakaran
18 Dec
‘ஞானம்’ என்பது ஒரு படத்தின் புள்ளிகளை இணைப்பது போன்றது. ஞானமில்லாமல், தேவன் கொடுத்த வாழ்க்கையை நோக்கி ஒருவர் முன்னேற முடியாது. “கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக” (ரோமர் 11:34-36) என்று ஞானத்தை அருளுகிற தேவனைக்குறித்து பரிசுத்த பவுல் இவ்வாறு கூறுகிறார். நீங்களும் இந்த ஞானமுள்ள பரலோகப் பிதாவை சார்ந்து கொள்ளும்போது, அவர் உங்கள் இருதயத்தில் கோடிக்கணக்கான புதிய எண்ணங்களையும் தீர்வுகளையும் உருவாக்குவார்.

இரண்டாம் உலக மகா போருக்குப்பின், ஜெர்மனி உருக்குலைந்து போனது. ஜனாதிபதி அடிநாயர் மிகவும் கடினமாக உழைத்தார். அதிகாலை 2 மணிக்கு பிறகுதான் அவர் படுக்கைக்கு தூங்கச் செல்வார். ஆனால், அதிகாலை 5 மணிக்கு அவர் தனது மனைவியுடன் தேவாலயத்திலிருப்பார். பத்திரிக்கை நிருபர்கள் அவரிடம், அதிகாலை 2 மணிக்கு படுக்கைக்கு சென்றுவிட்டு, 5 மணிக்கு அவர் மனைவியுடன் ஆலயத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறதை சுட்டிக்காட்டி, 2 மணி நேரம் மட்டும் தூக்கம் போதுமா? ஏன், கூட கொஞ்ச நேரமாவது தூங்கக் கூடாதா? எனக் கேட்டபோது அவர், தான் ஒவ்வொரு நாளும், புத்தம்புதிய ஆசீர்வாதத்திற்காக அதிகாலையிலே தேவனை தேடுகிறேன். முந்தின நாள் ஆசீர்வாதம் தேவையில்லை என்றார். தேவன் அவரை ஞானத்தினால் நிரப்பினார். அவர் ஜெர்மனியில் பொருளாதார அற்புதங்களைக் கொண்டு வந்தார். ஜெர்மனியின் பொருளாதார புரட்சியின் தந்தை என அடிநாயர் அழைக்கப்பட்டார்.
பிரியமானவர்களே, தேவன் தம்மைத் தேடுகிறவர்களுக்கு அவருடைய கிருபையைத் தருகிறார். இந்த ஜனாதிபதி தேவனை சார்ந்துகொண்டதினாலே, அவர் தேசத்தை ஆள, தமது ஞானத்தை அவருக்குக் கொடுத்தார். அவர் தேசத்தை வெற்றியின் பாதையில் நடத்தினார். “கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை” (நீதிமொழிகள் 15:33) என்ற வேதவசனத்தின்படி,  நீங்களும் ஆண்டவரைத் தேடினால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவர் தமது ஞானத்தினால் நிரப்புவார். வேலை ஸ்தலத்திலும், தொழிலிலும்கூட தமது ஞானத்தை உங்களுக்கு தந்தருளுவார். எனவே, அவரையே சார்ந்துகொண்டு, இந்த பூமியில் ஒரு வெற்றிகரமான நபராக நீங்கள் இருப்பதற்கு தேவனுடைய அளவில்லாத ஞானத்தை பெற்று ஆசீர்வாதமாய் வாழுங்கள். 
Prayer:
என்னை நேசிக்கும் அன்பு தகப்பனே,

நீர் என்னை உமது ஞானத்தினால் நிரப்பும்படியாக வந்திருக்கிறேன். என் வாழ்க்கையின் எல்லா பகுதியிலும், என் குடும்பத்திலும் நீர் உமது ஞானத்தின் வழியாக வெற்றியை அடையும்படி எனக்கு உதவிச் செய்தருளும். என் சுய ஞானத்தின்மீது சார்ந்துகொள்ளாமல் எந்த நிலையிலும் உமது ஞானத்தையே சார்ந்திருக்கும் கிருபையை எனக்குத் தாரும். உமது அளவில்லாத ஞானத்தினால் இம்மட்டும என்னை நிரப்பியிருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000