Loading...
Dr. Paul Dhinakaran

ஆசீர்வதிக்க விரும்புகிற தேவன்

Dr. Paul Dhinakaran
22 Oct
“கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.” சங்கீதம் 115:12
பிரியமானவர்களே! தேவன் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்” என்று ஆரோனும், அவனுடைய பிள்ளைகளும் என் ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்பொழுது, நான் அவர்களை அப்படியே ஆசீர்வதிப்பnன்” என்று தேவன் மோசேயிடம் கூறினார் (எண்ணாகமம் 6:24-27). இந்த நாளிலும் ஆண்டவரை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் ஆசீர்வாதமாய் வாழ்வீர்கள்.
ஒரு ஏழைத் தம்பதியினரின் மகன் கடைக்கு சென்றபோது, கடைக்காரர் அவனை திருட்டு குற்றம் சுமத்தியதால், அவன் மிகவும் அழுதுகொண்டே வீட்டிற்கு  வந்தான். இது, அவனுடைய தாயாரின் உள்ளத்தை மிகவும் பாதித்தது. காலையில் எல்லோரும் வீட்டைவிட்டுச் சென்றபின்பு, அந்தத் தாயார் அறைக்குள் நுழைந்து, கேஸ் சிலிண்டரின் வால்வை திறந்துவிட்டு, தனது குழந்தையை அணைத்தபடியே படுத்துக்கொண்டாள். அந்த வேளையில், பக்கத்து அறையிலிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து, “பாவ சஞ்சலத்தை நீக்க பிராண சிநேகிதர் உண்டே” என்ற பாடல் ஒலித்தது. அந்த பாடலிலிருந்து வந்த இயேசுவின் அன்பு அவளது உள்ளத்தில் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. உடனே அவள் எழுந்து வானொலிப் பெட்டி அருகே சென்று, “ஆண்டவரே, எங்கள் வாழ்விலுள்ள வேண்டாத பழிச்சொற்கள் அவமானங்கள் யாவற்றையும் நீக்கிப்போட்டு, எங்ளைக் காப்பாற்றும்” என்று இயேசுவிடம் மனம்கசந்து அழுது மன்றாடி ஜெபித்தாள். ஆண்டவர் அவர்களைத் தேற்றி, அவர்கள் அவமானப்பட்ட இடத்தில் அவர்களை மேன்மைப்படுத்தினார்.
 
ஒருவேளை இப்படிப்பட்ட வேண்டாத  பழிகளின் நிமித்தம் மனமுடைந்து போயிருக்கிறீர்களா? சிறிய காரியங்களுக்கும் நாம் மனம் உடைந்து போவோமானால், எந்த தவறையும் செய்யாத ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சகித்த அவமானங்களையும், பாடுகளையும் நினைத்துப்பாருங்கள். அவர் எவ்வளவாய் மனம் உடைந்து போயிருக்க வேண்டும்?   அவர் நமக்காகவே எல்லாவற்றையும் சிலுவையில் பொறுமையாய் சகித்தார். எதற்காக? நம்மை இரட்சித்து, ஆசீர்வதிப்பதற்காகவே. ஆகவே, இந்த அருமையான தம்பதியரை இரட்சித்து ஆசீர்வதித்த தேவன், நிச்சயமாக உங்களையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார் (சங்கீதம் 115:12). மனந்தளர்ந்துவிடாதீர்கள். நிறைவாகிய ஆண்டவர் உங்கள் இல்லத்தில் வரும்போது, குறைவானது  ஒழிந்துபோகும். ஆகவே, தேவனைத் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தை தருவார்.
Prayer:
என்னை மிகவும் அதிகமாய் நேசிக்கிற பரம தகப்பனே, உமது பிள்ளைகளை நீர் ஆசீர்வதிக்கவே விரும்புகிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய தேவைகளை உம்முன் வைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு குறைவுகளையும் நீக்கி என்னை ஆசீர்வதியும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்படி உமது திரு நாமத்திற்கு மகிமையாக என் வாழ்க்கையை செழிக்கச்செய்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

 

For Prayer Help (24x7) - 044 45 999 000