Loading...
Paul Dhinakaran

கொடுப்பதே ஆசீர்வாதம்!

Dr. Paul Dhinakaran
26 Jan
தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்றதைக் கொடுக்கும்படி தேவன் நமக்கு வலியுறுத்துகிறார். ஆகவே, எப்பொழுதும் உங்களிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதற்கு ஆயத்தமாயிருங்கள். உங்களிடமுள்ள திறன்களுக்கும், திறமைகளுக்கும் ஆண்டவர்தான் ஆதாரமாயிருக்கிறார். உங்கள் திறமைகளை தேவநாமம் மகிமைப்படும்படி உபயோகப்படுத்துங்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் மற்றவருக்கு கொடுப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7) என்று வேதம் கூறுகிறது. இவ்வுலகில் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் உதவுவதன் மூலம் தேவராஜ்யத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினாலே உங்களுக்கு அளக்கப்படும் (லூக்கா 6:38). உங்களுடைய உதாரத்துவ குணமே உங்கள் ஆசீர்வாதங்களை பெருகச்செய்யும். 

 கிராஃப்ட் சீஸ் கார்ப்பரேஷனின் தலைவர் எல் கிராஃப்ட் அவர்கள் பல ஆண்டுகளாக கிறிஸ்தவ தேவைகளுக்காக, தனது வருமானத்தில் சுமார் 25% கொடுத்து வருகிறார். அவர் கூறுகிறார், “நான் இறைவனுக்குக் கொடுத்த பணத்தினால், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஈவுத்தொகையே நான் செலுத்திய  முதலீடு.” J.D.ராக்பெல்லர், “எனது முதல் சம்பளமாகிய 1.50 (வாரம்) டாலரை நான் தசமபாகமாக கொடுத் திராவிட்டால், முதல் மில்லியன் டாலருக்கு தசமபாகம் கொடுக்கும்படி நான் வளர்ந்திருக்க முடியாது.”

“அதிகமாய் கொடுப்பவர்கள்” என்று பல கோடீஸ்வரர்களை வரலாறு பதிவு செய்துள்ளது. ஆனால், லூக்கா 12:48-ல் நாம் வாசிக்கிறோம், “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்.” ஆகவே உங்களால் இயன்றவரை எப்போதும் எல்லாநேரத்திலும் மற்றவருக்கு உதவும்படி ஆயத்தமாயிருங்கள்.  ஆண்டவர் எல்லா மனிதர்களிடத்திலும் மற்றவருக்கு உதவும்படியான ஒரு இயற்கையான குணத்தை நமக்கு வைத்திருக்கிறார். கொடுப்பதற்கு விருப்பமிருந்தாலும், பயம் உங்களை தடுக்கிறது. தேவனை விசுவாசிப்பதன் மூலம் பயம் உங்களை விட்டுவிலகும். “கொடுக்கும்” செயலால் உங்களால் மற்றவர்கள் ஆசீர்வாதம் பெறும்படி, தேவன் உங்களை அழைக்கிறார். “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதிமொழிகள் 11:25). கொடுப்பதன் மூலம் உங்கள் குடும்பத்தில் செழிப்பு வரும். தேவகரத்திலிருந்து இதுவரை நீங்கள் பெற்றுள்ள அளவில்லாத நன்மைகளை எண்ணிப்பாருங்கள். அப்பொழுது தொடர்ந்து மற்றருக்கு கொடுக்க விரும்புவீர்கள்.

Prayer:

அன்பின் பரலோகப்பிதாவே,

உமது இரக்கத்திற்கும், கிருபைக்கும், அன்பிற்கும் நன்றி செலுத்துகிறேன். எல்லா திறன்களையும், திறமைகளையும் கொடுத்து இந்த உலகத்திற்கு நீர் என்னை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. நீர் கொடுத்திருக்கும் பொக்கிஷங்களை எனக்குள்ளே நான் அடக்கிவைக்க வேண்டாம். எனது எதிர்காலத்தைக் குறித்த அச்சங்கள் மற்றும் கவலைகளிலிருந்து வெளிவர எனக்கு உதவும். உமது ஜீவநதி என்னிலிருந்து மற்றவருக்கு பாய்ந்து செல்லட்டும். எனது குடும்பத்திற்கும் தேசத்திற்கும் என்னை ஆசீhவாதமாக மாற்றும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000