Loading...
Paul Dhinakaran

வெளிப்பாடு!

Dr. Paul Dhinakaran
17 Jun
பிரியமானவர்களே, அநேக சந்தர்ப்பங்களில் நாம் கையிட்டு செய்கிற பிரயாசங்களில் பெரும்பாலும் சொந்த முயற்சியை மட்டுமே நம்பி பிரயாசப்படுகிறோம். ஏனெனில் நீண்ட காலம் காத்திருப்பது இருதயத்தை இளைக்கப்பண்ணுகிறது.  மிகவும் தாமதமாகத்தான் இப்படிப்பட்ட காரியங்களை நாம் புரிந்துகொள்கிறோம். தேவன் உங்களுக்கு ஒரு காரியத்தை தர தாமதித்தால் அதில் ஒரு ஆசீர்வாதம் நிச்சயமாக இருக்கும். அந்த காரியத்தை பெறும்படி நீங்கள் காத்திருக்க வேண்டும்.  நீங்கள் எதையாகிலும் செய்யும்படி அவர் உங்களை வழிநடத்தினால், அதன்படியே செய்யுங்கள். இதுதான் வழி. தேவன்மேல் நீங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துபோகாதிருங்கள். வேதம் கூறுகிறது, “தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்”  (பிரசங்கி 2:26).அவரிடத்தில் உங்களை அர்ப்பணிக்கும்போது, அவர் உங்களை உலகப்பிரகாரமாக மட்டுமல்ல ஆவிக்குரிய ரீதியாகவும் ஆசீர்வதிப்பார்.

எகிப்து தேசத்தில் ஏழு வருடம் செழிப்பைத் தொடர்ந்து, ஏழு வருடம் பஞ்சம் வந்தது. இதனால், தேசத்தில் முன்பிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோனது. ஆனால், தேவன் யோசேப்புக்கு, தீர்க்கதரிசனம், வெளிப்பாடு இவைகளின் மூலம், தானிய விளைச்சலை அதிகரிப்பது , அவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பது, சரியான விதத்தில் விநியோகம் செய்வது, இவைகளின் மூலமாக தேசத்திற்குச் செழிப்பைக் கொண்டு வருவது ஆகிய எல்லா வகையான ஞானத்தையும், சூழ்நிலைக்கேற்ற உணவு தானிய நிர்வாகத் திறமையையும் அளித்தார். யோசேப்பின் வெளிப்பாடு மூலமாக, அவன் எகிப்து முழுமைக்கும் அதிகாரியானான். எகிப்தின் களஞ்சியங்களெல்லாம் தானியத்தால் நிறைந்திருந்தது. சகல தேசத்தார்களும் எகிப்திலே தானியம் கொள்ளும்படி யோசேப்பினிடத்தில் வந்தார்கள்.
பிரியமானவர்களே, யோசேப்பு களஞ்சியங்களில் சேமித்து வைத்த உணவு தானியங்களை மக்களுக்கு விநியோகித்து சகல தேசத்தாரையும் பட்டினியிலிருந்து காப்பாற்றினான். அதினிமித்தம், யோசேப்பு ஆராதித்த தேவாதி தேவனை சகல தேசத்தார்களும் அறிந்துகொண்டனர். எகிப்து தேசம் உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரியபிரகாரமாகவும் செழிப்பாயிருந்தது. இதேபோல தேவன் அவருடைய பரிசுத்த ஆவியால் ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்கும்போது, நீங்கள் பெற்றுக்கொண்டால், நீங்கள் முழு உலகத்தையும் காப்பாற்றுவீர்கள். நீங்கள் உங்களை அவரிடத்தில் ஒப்படைக்கும்போது, தேவன் உங்கள் பகுதியிலுள்ள மற்றும் உங்கள் பட்டணத்திலுள்ள மக்களைக் காப்பாற்ற உங்களை பயன்படுத்துவார்.

ஆகவே, தேவ சமூகத்தில் உங்களை தாழ்த்துங்கள். மேலும் அவர் உங்கள் வாழ்வில் கிரியை செய்யும்படி அனுமதியுங்கள்.அப்பொழுது நீங்களும் உயர்த்தப்படுவீர்கள். “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக்கோபு 4:10) என்று வேதம் கூறுகிறது.
Prayer:
தேவனே, சகல தேசத்தாரையும் காப்பாற்றிய யோசேப்பை நீர் உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்பி அபிஷேகித்ததுபோல என்னையும் நிரப்பும். என்னை நொறுக்கி, உருக்கி, உருவாக்கி உம்முடைய நாம மகிமைக்காக பயன்படுத்தும். நான் எனக்கிருக்கும் கொஞ்ச அறிவையும், உம்முடைய கரங்களில் தருகிறேன். உமுமடைய திட்டங்களை இயேசுவின் நாமத்தில் வெளிப்படுத்தியருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000