Loading...
Dr. Paul Dhinakaran

வல்லமையின் ஆவியானவர்!

Dr. Paul Dhinakaran
12 Jul
“பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று ஆண்டவர் வேதத்தில் பல இடங்களில் கூறியுள்ளார். மனிதகுலத்தின் வரலாறு முழுவதுமாக ஆராய்ந்துபார்ப்போமானால் தேவதிட்டத்தின்படி நாம் முன்னேறிச்செல்ல முடியாதபடி தடை செய்யும்படி பிசாசு பயத்தை ஆயுதமாக பிரயோகிக்கிறான். உங்கள் வாழ்க்கை வேருன்றி வளர முடியாதபடி,  தேவன் உங்களுக்கு பயத்தின் ஆவியை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார். இந்த பட்டயம் உங்களை வெற்றி சிறக்கப்பண்ணும். 
 
வேதத்தில் தாவீது என்று அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். அவன் தனது எதிரிகளை அச்சமின்றி எதிர்கொள்ள அறிந்தவன். ராட்சதனான கோலியாத்தை அவன் எதிர்கொண்டபோது என்ன நடந்தது? ஓடையிலிருந்து எடுக்கப்பட்ட ஐந்து கூழாங்கற்களை எடுத்து தனது பையில் வைத்துக்கொண்டு, கையில் ஒரு கவணுடன் கோலியாத்தை அணுகினான். தாவீது கோலியாத்தை பார்த்து, நீ பட்டயத்தோடும் கேடகத்தோடும், ஈட்டியோடும் என்னிடத்தில் வந்திருக்கிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று உன் தலையை உன்னைவிட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்” (1 சாமுவேல் 17:45-47). யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு முன்பு ஒரு திடமான அறிக்கையை தாவீது கூறுகிறான். அவன் கூறிய வார்த்தையின்படியே, பட்டயத்தால் அல்ல தன்னிடத்திலிருந்த கவண் கற்களினால் அவன் கோலியாத்தை வீழ்த்தினான். 
தாவீதால் இதை எவ்வாறு செய்ய முடிந்தது? தேவ ஆவியானவர் அவனோடிருந்தபடியால் இது சாத்தியமாயிற்று. ஆம், எதிரியை தோற்கடிக்கும்படி, தேவ ஆவியானவர் தான் நமக்கு பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை கொடுக்கிறவர் (2 தீமோத்தேயு 1:7). தேவ ஆவியினாலே, சில சிறிய கற்கள் தான் ஒரு பெரிய இராட்சதனை வீழ்த்தும் ஆயுதமாக மாறியது. இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தேவ ஆவியுடனே உங்களுடைய சிறிய கூழாங்கல் போன்ற திறமையை இணைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் எதிராளியான சத்துரு விழுவதை நீங்கள் காண்பீர்கள். 
Prayer:
அன்பும். இரக்கமும் நிறைந்த பரலோகப்பிதாவே,

நீர் பயமுள்ள ஆவியை கொடாமல் பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறீரென்று, உம்முடைய வார்த்தை சொல்லுகிறது இந்த வார்த்தையின்படியே என்னுடைய வாழ்விலுள்ள பயங்கள் அனைத்தையும் நீக்கியருளும். தேவ ஆவியானவரின் பலத்தை எனக்குள் ஊற்றும். அன்பு நிறைந்த இதயத்தை தாரும். தேவ ஆவியானவர் தருகிற ஆலோசனையினால் எதிரிகளை எதிர்கொள்ள பெலன் தாரும். உலகப்பிரகாரமான ஆயுதங்களோடு என் பிரச்சினைகளை எதிர்கொள்ளாதபடி, தாவீதைப்போல தேவ ஆவியினால் அவைகளை எதிர்கொள்ளும் தெளிந்த சிந்தயை எனக்குத்தாரும். ஆவியானவரே நீரே என்னை வழிநடத்தும்படி, உம்மிடத்தில் என்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறேன். நீரே என்னை ஆசீர்வதியும்!

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்!

1800 425 7755 / 044-33 999 000