Loading...
Stella dhinakaran

இரட்சணியப் பாடல்கள்!

Sis. Stella Dhinakaran
01 Nov
கடந்த 10 மாதங்களும் கர்த்தர் நமக்கு போதுமானவராயிருந்தார். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தமது செட்டைகளின் மறைவிலே  வைத்து பாதுகாத்தார். உங்கள் தேவைகள் அனைத்தையும் அவரே பொறுப்பெடுத்துக்கொண்டார். இதற்காக நீங்கள் முழு இருதயத்தடனும் அவருக்கு  நன்றி செலுத்துங்கள். தாவீது கூறுவதுபோல, இந்த புதிய மாதமாகிய நவம்பரில் நாமும் ஆண்டவரைப் பார்த்து, “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்” (சங்கீதம் 32:7) என்று சொல்லுவோம். இந்த வார்த்தையின்படியே,  எந்த தீங்கும் உங்களை அணுகாதபடிக்கு கர்த்தரே உங்கள் அடைக்கலமாயிருப்பார். ஒருவேளை கொடூரமான ஜனங்களின் சீறல் உங்களுக்கு எதிரே எழும்பினாலும், அவரே உங்கள் பெலனும், திடனும், அடைக்கலமுமாயிருந்து உங்களை பாதுகாப்பார் (ஏசாயா 25:4).

1875ஆம் ஆண்டில், ஈரா சாங்கி டெலாவேர் என்பவர் நதி நீராவிப் படகில் பயணித்தபோது, அங்குள்ள பயணிகள் சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். ஏனெனில் அவர் பிரபல சுவிசேஷகர்  D.L.மூடியின் பாடற்குழு தலைவர் ஆவார். மக்கள் அவரிடம் அவருடைய சொந்த பாடல் ஒன்றை பாடும்படி கேட்டார்கள். ஆனால் சாங்கியோ, வில்லியம் B.பிராட்பரியின் பாடலான “ஒரு மேய்ப்பனைப் போன்று மீட்பர் நம்மை வழிநடத்துகிறார்” என்ற பாடலை ஓரிரு வரிகள் பாடும்போதே, மற்றொரு பாடலான, “நாங்கள் உம்முடையவர்கள்; நீர் எங்களுடன் நட்பு பாராட்டும். எங்கள் வழியின் பாதுகாவலராயிரும்” என்ற பாடல் வரிகள் காதில் கேட்டது. அந்த பாடலை பாடிய நபர் முன்வந்து, “1862ல், யூனியன் இராணுவத்தில் நீங்கள் எப்போதாவது, நிலவொளியின் வெளிச்சத்தில் பணியாற்றியிருக்கிறீர்களா? எனக்கேட்டார். அதற்கு சாங்கி ஆச்சரியத்துடன், ஆம் என்று பதிலளித்தார். அப்போது அந்த நபர் நான் கூட்டமைப்பு இராணுவத்தில் தான் பணியாற்றினேன். நீங்கள் பதவியில் இருந்தபோது, ‘இவர் இனி உயிரோடு இருக்கக்கூடாது’ என நினைத்தேன். உங்களை கொல்வதே எனக்கு கொடுக்கப்பட்ட பணியாயிருந்தது. நான் மறைவிலே நின்று, என் துப்பாக்கியை உமக்கு நேராக குறிபார்த்தேன். அந்த இரவில்  முழு நிலவின் வெளிச்சமும் உங்கள்மீது வீசியது எனக்கு சாதமாகயிருந்தது. நீங்கள் அந்த நொடிப்பொழுதில் உங்கள் தலையை உயர்த்தி வானத்தை நோக்கி பாட ஆரம்பித்துவிட்டீர்கள். “இப்பொழுது நான் அவரை சுடமுடியும். என் தோட்டாக்களுக்கு அவர் தப்ப முடியாது’ என்று எனக்குள்ளே கூறிக்கொண்டேன். ‘சற்றுமுன் நான் பாடிய பாடலைத்தான், அப்போது நீங்கள் பாடிக்கொண்டிருந்தீர்கள்.’  அந்த பாடல் வரிகள், தேவனுக்கு பயந்த என் தாயாருடன் இருந்த என் குழந்தை பருவத்தை எனக்கு நினைப்படுத்தியது. என் தாயார் பலமுறை இந்த பாடலை எனக்காக பாடியுள்ளார். இந்த பாடலை நீங்கள் பாடி முடித்தபின் உங்களை குறிவைப்பது எனக்கு கடினமாயிற்று. ‘இந்த மனிதனை மரணத்திலிருந்து காப்பாற்றிய இறைவன் நிச்சயமாக பெரியவராகவும் வல்லமையுள்ளவராகவும் இருக்க வேண்டும்’ என நினைத்து, குறிப்பார்ப்பதை விட்டு, என் கரங்கள் கீழிறங்கியது. 
அன்பானவர்களே, சரியான பாடலைப்பாட தேவன் எவ்வளவு அழகாக அவரை வழிநடத்தியிருக்கிறார் பாருங்கள். “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான் (சங்கீதம் 91:1-4) என்ற வார்த்தையின்படியே கர்த்தர் உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி பாதுகாப்பார்.  “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடுவார்” (உபாகமம் 33:27). ஆகையினால் கவலைப்படாதிருங்கள்!
Prayer:
அன்பின் தகப்பனே,

என் வழிகளிலெல்லாம் பாதுகாக்கிற உமது அன்பிற்கு நான் நன்றி கூறுகிறேன். உம்முடைய அற்புதமான நிபந்தனையற்ற அன்பில் நான் இளைப்பாறுகிறேன். ஏற்ற நேரத்தில் உமது ஞானத்தை கொடுத்து விவேகமாய் நடந்து கொள்ள உதவிச்செய்தருளும். இந்த உலகில் இருப்பவனை விட என்னில் இருப்பவர் பெரியவர் என்பதை நான் அறிவேன். அந்த விசுவாசத்தை எப்பொழுதும் காத்துக்கொள்ள கிருபை செய்தருளும். என்னையும் என் குடும்பத்தினரையும் உமது வல்லமையுள்ள சிறகுகளின் கீழ் பாதுகாத்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000