Loading...
Dr. Paul Dhinakaran

ஆசீர்வாத மழை

Dr. Paul Dhinakaran
19 Oct
என் விலையேறப்பெற்ற நண்பரே. "நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்" (லேவியராகமம் 26:4) என்று தேவன் கூறுகிறார். இந்த வார்த்தை தேவன் இன்று உங்களுக்காக கொடுக்கின்ற வாக்குறுதியும் ஆசீர்வாதமும் ஆகும். நீங்கள் வறட்சியில் இருக்கிறீர்களா? ஆசீர்வாதம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா? "என் பிள்ளைகளே உங்கள்மீது ஆசீர்வாத மழையை ஊற்ற இதுவே சரியான நேரம்" என்று ஆண்டவர் கூறுகிறார். ஆண்டவர் தான் பருவங்களையும் நேரத்தையும் நியமித்தார் என்பதை வேதம் கூறுகிறது. "ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு" (பிரசங்கி 3:1,2).தேவன் நீதியானவர்கள் மீதும் அநீதியானவர்கள்மீதும் மழையை அனுப்புகிறார் என்று வேதம் கூறுகிறது. "அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்" (மத்தேயு 5:45). நான் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதமான மழையை பெய்யப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த ஆசீர்வாதங்கள் என்றென்றும் உங்கள்மீது தங்கியிருக்கும். இதற்காக, இயேசு தன் இரத்தத்தையே மழையை போல சிந்தியிருக்கிறார். இயேசுவின் இரத்தம் உங்களுக்காக எப்பொழுதும் நல்ல விஷயங்களையே பரிந்து பேசுகிறது.

எசேக்கியேல் 34:26-ல், "நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்" என்று ஆண்டவர் கூறுகிறார். ஆம் இந்த வார்த்தையின்படியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். ஏற்ற நேரத்தில் மழை பெய்யும். "சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்" (யோவேல் 2:23). கர்த்தர் ஏற்ற காலத்தில் முன்மாரியும் பின்மாரியுமான மழையை அனுப்புவார்.
விதைப்பதற்கு முன் நிலத்தை பண்படுத்துவதற்கு முன்மாரியான மழை பெய்கிறது. அதன்பிறகு விதை விதைக்கும்போது, பயிர் வளரத் தொடங்குகிறது. பின்மாரியான மழை பெய்யும்போது பயிர் வளர்ந்து அறுவடை மிகுதியாகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் மழை தேவை என்பது ஆண்டவருக்குத் தெரியும். உங்களுக்கு தேவையான போதெல்லாம் அவர் ஏற்ற மழையை அனுப்புவார். நீங்கள் ஒருபோதும் எதையும் இழந்துபோகமாட்டீர்கள். ஆகவே கவலைப்படாதிருங்கள்! ஏற்ற நேரத்தில் தேவன் பெய்யப்பண்ணுகிற ஆசீர்வாத மழையின் மூலம் கிடைக்கின்ற அறுவடையினால் நீங்கள் கர்த்தரை துதிப்பீர்கள். 
Prayer:
அன்பின் தேவனே,

நான் உமது வாக்குறுதியை நம்புகிறேன். எனக்கு தேவைப்படும் நேரத்தில் ஆசீர்வாதமான மழையை அனுப்பியருளும். உமது கனமும் மகிமையும் என்னை சூழ்ந்துகொள்ளட்டும். உமது பரிபூரண ஆசீர்வாதத்தினால் என்னை நிரப்பும். நீர் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறபடியால், நான் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்க கிருபை செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000