Loading...
Dr. Paul Dhinakaran

பிரகாசிக்கும் வெளிச்சம்!

Dr. Paul Dhinakaran
26 Feb
தேவனுடைய பராமரிப்பின் கீழ் நீங்கள் வரும்படி, இன்று தேவன் உங்களை அழைக்கிறார். எந்த காரியத்தை குறித்து உங்களுக்கு பயமும், திகலும், துன்பமும் காணப்படுகிறதோ, அதற்காக தேவனையே நோக்கிப் பாருங்கள்“ (சங்கீதம் 34:5). நீங்கள் இயேசுவை நோக்கிப்பார்க்கும்போது, சூரியனை கண்டு மூடுபனி விலகுவதுபோல, உங்கள் கஷ்டங்கள் யாவும் மறைந்துபோகும். உங்களை நேசித்து உங்களுக்காக மரித்தவருக்கு முன்பாக எதுவும் எதிர்த்து நிற்கமுடியாது.  தன்னுடைய பிரச்சினைகளால் திகைத்து நின்ற சகோதரர் பிரதீக் ஜெயின் (பிஜ்னோர், உத்தரபிரதேசம்) அவர்கள் இயேசுவைப் நோக்கிப் பார்த்து எவ்வாறு உற்சாகமடைந்தார் என்ற சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.

2002-ம் ஆண்டு நான் என்ஜினியரிங் படிக்கும்போது என் தகப்பனாருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு அவர் மிகவும் மோசமான நிலைமைக்குள்ளானார். ஆகவே என் படிப்போடு சேர்த்து அவர் நடத்தி வந்த பெட்ரோல் பங்க் நிறுவனத்தையும் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுதுதான் என் தகப்பனார் விருந்தினர் இல்லம் கட்டுவதற்கு பணம் முதலீடு செய்திருப்பதை அறிந்து, மிகுந்த கடன் பாரத்தினால் வேதனையுற்றேன். இந்த பயங்கரமான சூழ்நிலையில் லட்சக்கணக்கில் வட்டி செலுத்தும் நிலை ஏற்பட்டது. இதற்கு ஒரே வழி அந்த விருந்தினர் இல்லத்தை விற்று அந்த பணத்தை வைத்து கடன்களை அடைக்கலாம் என்று நினைத்தேன். 5 வருடங்கள் போராடியும் விற்க முடியாமல் பயங்கர தடுமாற்றம் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் என் தகப்பனார் சுகம் அடைந்தாலும், பரிபூரண விடுதலை பெறாமல் பெலவீனத்திலேயே வாழ்ந்து வந்தார். இதினால் படிப்பில் என்னால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு என் படிப்பை முடித்தேன். அதன்பிறகு ஒரு டிராவல் ஏஜென்சி ஆரம்பித்து அதில் வரும் லாபத்தை வைத்து வியாபாரத்தை பெரிதாக்கலாம் என நினைத்தேன். ஆனால் அதுவும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 2007ம் ஆண்டு, ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்கும்படி ஒருவர் என்னை உற்சாகப்படுத்தினார். முதன்முறையாக தேவனுடைய வார்த்தை வல்லமையாக பிரசங்கிப்படுவதையும், ஜனங்கள் அற்புதங்களை பெறுவதையும், சாட்சி பகிர்வதையும் நான் பார்த்து அதிசயப்பட்டேன். தொடர்ந்து  இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்தேன். மிகுந்த ஆறுதலாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும் இருந்தது. எனக்கும் ஆண்டவர் இயேசு ஒரு அற்புதம் செய்வார் என்ற விசுவாசம் எழும்பியது. னுச. பால் தினகரன் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அவர்களிடமிருந்து வரும் பதில் கடிதங்கள், என் பிரச்சனைகள் யாவும் தீரும் என்கிற வார்த்தைகளை சுமந்து வந்தது. ஆச்சரியமாக, ஆகஸ்ட் 2007-ல், விற்கப்படாமல் இருந்த அந்த சொத்து நல்லதொரு விலைக்கு விற்கப்பட்டது. கடன்கள் யாவும் மறைந்தது. தொடர்ந்து ஆண்டவருடைய ஆசீர்வாதங்கள் எங்கள் வாழ்வில் பெருகியது.
பிரியமானவர்களே, “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (சங்கீதம் 42:1) என்று  தாவீது கூறுவதுபோல, உங்கள் ஆத்துமா தேவனையே நோக்கி இருக்கட்டும். உங்களை பராமரிப்பவரின் அன்பான கரங்களில் உங்கள் பிரச்சனைகளை ஒப்படைத்து விடுங்கள். அவருடைய அன்பு புரிந்துகொள்ள முடியாத மகத்தான அன்பு. அவர் உங்கள் கண்ணீருக்கு பதில் கொடுப்பார். ஆறுதலின் தேவன் உங்களை ஆறுதல்படுத்துவார். உங்களுக்காக வல்லமையான அற்புதங்களைச் செய்வார். நீங்கள் ஒருபோதும் வெட்கப்படமாட்டீர்கள். உங்கள் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்கும்.
Prayer:
அன்பின் தேவனே,

நீர் என்னை ஆழமாக நேசிக்கிறீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீர் எப்போதும் என்னுடனே இருக்கிறீர் என்பதை நான் நம்புகிறேன். எனக்குள்ளிருக்கும் பயத்தின் ஆவியையும், அவிசுவாசத்தின் ஆவியையும் நீக்கியருளும். உமது வல்லமையினால் மலைகளும் உருகுமே. எனது பிரச்சினைகள் எம்மாத்திரம்? என்னுடைய பிரச்சினைகள் அனைத்தையும் நீர் மலைகளைப்போல உருகிப்போகச் செய்வீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என் வாழ்வில் உமது வல்லமை வெளிப்பட வேண்டுமென்று ஆவலாய் நான் காத்திருக்கிறேன். என்னைப்போன்று கஷ்டத்தில் வாழ்பவர்களுக்கு சாட்சியாக என்னை உயர்த்தும்.  

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000