Loading...
Dr. Paul Dhinakaran

வெற்றி எனும் கேடகம்

Dr. Paul Dhinakaran
17 Oct
என் விலையேறப்பெற்ற நண்பரே, இந்த நாள் ஆண்டவருடைய அருள்மாரி பொங்கி வழியும் நாளாக இருப்பதாக. உங்கள் வாழ்வில் ஆசீர்வாத மழை பெய்யும். ஆண்டவருடைய வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறுவதாக. இன்றைய வாக்குத்தத்தம் சங்கீதம் 18:35ல் எழுதப்பட்டுள்ளது. "உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உமது காருணியம் என்னைப் பெரியவனாக்கும்." ஆண்டவர் "வெற்றி எனும் கேடகத்தை உங்களுக்கு தந்திருக்கிறார்." மற்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பு இரட்சிப்பு எனும் கேடகம் என்று கூறுகிறது. இந்த கேடகம் எதற்காக உங்களுக்கு வேண்டும்? பொல்லாத பிசாசானவன் உங்களை அழிக்கும்படிக்கு உங்களுக்கு எதிராக ஆயுதங்களை வீசுகிறான். உங்கள் ஆத்துமாவை அவன் பக்கமாக திருப்பவும், கவனத்தை ஈர்க்கவும் உங்களை வஞ்சிக்கிற ஆயதங்களை உபயோகிக்கிறான். ஆகவேதான், கர்த்தர் நமக்கு இரட்சிப்பு எனும் கேடகத்தை தருகிறார். இது உங்களைச்சுற்றிலும் கவசமாயிருந்து உங்களை பாதுகாக்கும். இயேசு கிறிஸ்து இந்த கேடகத்தை சிலுவையின் மூலம் சம்பாதித்தார். இயேசுவின் இரத்தமே நம்முடைய கேடகம். இது உங்களை அழிக்க வருகிற ஆயுதங்களுக்கு எதிராக நல்ல காரியங்களை செய்கிறது. எபிரெயர் 12:24ல் "புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும்....நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்." என்று கூறுகிறது.

பிசாசு ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா. அவன் எப்போதும் மனிதர்களிடத்தில் ஆண்டவர் உங்களை கவனிப்பதில்லை, அவர் உங்களை நேசிக்கவில்லை என்று கூறுகிறான். உலக மக்களுடைய வல்லமையைவிட, தேவனுடைய வல்லமை மிகப்பெரியது. சில நேரங்களில் நாம் தேவனுக்காக காத்திருக்காமலும், தேவ அன்பை நம்பாமலும் இருப்பதால், பிசாசு நமக்குள் நுழைந்து நம்முடைய ஆத்துமாவை கெடுத்துப்போடுகிறான். ஆம்! ஆகையினால் தான் கர்த்தர் உங்களுக்கு இரட்சிப்பின் கேடகத்தை அளித்துள்ளார். பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைப் குறித்து நல்ல விஷயங்களைப் பேசுகிறார். இது உங்கள் வாழ்வில் நலமானவற்றை கொண்டுவருகிறது. நம்முடைய ஆத்துமா பாதுகாக்கப்படுகிறது. 
"கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்" (சங்கீதம் 5:12) என்று கூறுகிறது. உங்கள் மத்தியில் காணப்படும் தேவதயவே "காருணியம்" என்று அழைக்கப்படுகிறது. உமது காருணியம் என்னை பெரியவனாக்கும் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அதுபோலவே, "அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்" (சகரியா 9:17). இந்த கிருபையை தேவன் இன்று உங்களுக்கு தருவாராக.
Prayer:
அப்பா பிதாவே,

என்னை பாதுகாத்தருளும். நீர் இரட்சிப்பின் கேடகமாகவும், என்னைச்சுற்றிலும் வெற்றிக் கவசமாகவும் இருந்தருளும். என் வாழ்வில் உமது நன்மைகள் பெருகட்டும். எனக்கு விரோதமாக பிசாசு உருவாக்குகிற ஆயுதங்களை வாய்க்காமல் போகச்செய்தருளும். எப்போதும் நீர் என்னோடிருந்து பெரிய காரியங்களை செய்தருளும். 

இயேசுவின் நாமததில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000