Loading...

கர்த்தரை தேடி நன்மையானதை செய்!

Shilpa Dhinakaran
15 Aug
இந்த உலகம் தீமை நிறைந்தததாகவும், ஊழல் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால், தேவன் நம்மைப்பார்த்து நன்மையானதை செய்யும்படி கூறுகிறார். எப்படிப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக அவருக்கு சாட்சியாக வாழவேண்டும். சிலநேரங்களில் நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தரை நினைவில் வைத்து, நீங்கள் தேர்ந்தெடுக்கிற வழிகளில் தேவனை பிரியப்படுத்தும்படி வாழுங்கள். “நீங்கள் தீமையால் வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வெல்லுங்கள்” (ரோமர் 12:21) என்று தேவன் கூறுகிறார். உங்களுக்கு எதிராக மக்கள் தீங்கான காரியத்தை செய்யலாம், நீங்கள் செய்யாத விஷங்களைக்குறித்து தவறாக குற்றஞ்சாட்டலாம்.  அப்படிப்பட்டவர்களை மன்னிப்பது உங்களுக்கு கடினமாயிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டுமென்று ஆண்டவர் கூறுகிறார். இதனால் உங்கள் மூலமாக அவர்கள் இறைவனை காண்பார்கள். 

அன்னை தெரசா எழுதிய பிரபலமான மேற்கோள் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். “மக்கள் பெரும்பாலும் நியாயமற்றவர்களும், பகுத்தறிவற்றவர்களும், சுயநலவாதிகளுமாய் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியிருந்தாலும் அவர்களை மன்னியுங்கள். நீங்கள் இரக்கமுள்ளவர்களாயிருந்தால், மக்கள் உங்களை தங்கள் சுயநலமான நோக்கங்களுக்காக குற்றம் சாட்டலாம். அவர்கள் எப்படியிருந்தாலும், நீங்கள் அவர்கள்மீது இரக்கமாயிருங்கள். அப்பொழுது உங்களுக்கு துரோகம் செய்கிற நண்பர்களையும், சில உண்மையான எதிரிகளையும் வெல்வீர்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால், அவர்கள் உங்களை ஏமாற்றலாம். ஆனாலும், எல்லா எப்பொழுதும் நீங்கள் உண்மையுள்ளவராக இருங்கள். நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய பெயரை மற்றவர் ஒரே இரவில் அழிக்கக்கூடும். நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் சிலர் பொறாமைப்படலாம். ஆனாலும், சந்தோஷமாயிருங்கள். இன்று நீங்கள் செய்கிற நன்மைகள் மறக்கப்பட்டு போகலாம். ஆனாலும், நன்மை செய்வதை விட்டுவிடாதிருங்கள். உங்களிடம் உள்ள மிகச்சிறந்ததை மற்றவருக்கு கொடுங்கள். 
தாவீது தனக்கு நேரிட்ட தீமையை எவ்வாறு நன்மையாக மாறப்பண்ணினார் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். தாவீது மீது பொறாமை கொண்ட சவுல் ராஜா அவனைக் கொல்ல பலமுறை முயன்றான். தாவீது வனாந்தரத்தில் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவனைப் பின்தொடர்ந்தான். வழியிலே தாவீது குகையிலிருப்பதை அறியாமல், ஓய்வெடுக்கும்படி அந்த குகைக்குள் சென்றான். தேவன் எதிரிகளை தனது கரத்தில் ஒப்புக்கொடுத்திருப்பதை தாவீது அறிந்திருந்தாலும், தாவீது தேவனுக்கு பயந்து சவுல் ராஜாவுக்கு தீமை செய்ய விரும்பவில்லை. அதனால் அவன் அருகில் சென்று அவன் கட்டியிருந்த கயிற்றிலுள்ள ஒரு மூலையை வெட்டி எடுத்துக்கொண்டான். தேவனால் அபிஷேகிக்கப்பட்ட சவுலை தாவீது கனம்பண்ணினான். சவுலின் வாழ்க்கை தாவீதின் கரங்களில் இருந்தபோதிலும், அவன் சவுலை கொல்லவில்லை என்பதை அவனுக்கு விளக்கினான். இந்த செயலின் மூலம் தாவீது தன்னைவிட நீதியுள்ளவன் என்பதையும்,  தேவன் அவருடனே இருக்கிறார் என்பதையும் சவுல் புரிந்துகொண்டான். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றும், தேவன் நம்முடனே இருக்கிறார் என்பதையும், நாம் செய்கிற நன்மையின் மூலம் ஜனங்களுக்கு காண்பிக்க வேண்டும். நமக்கு தீங்கு செய்ய நினைக்கின்ற மனிதர்கள் ஒருநாள் தங்கள் தவறை உணர்ந்து நமக்கு நன்மைசெய்வார்கள்.
Prayer:
அன்பின் தேவனே,

இந்த பொல்லாத உலகில் நான் நீதியாக வாழும்படி என்னை வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே எல்லா சூழ்நிலையிலும் மற்றவருக்கு நன்மைசெய்ய கிருபை செய்தருளும். நான் செய்கின்ற அனைத்தும் எனக்கும் உமக்கும் இடையில் உள்ளன என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆகவே, உமது நீதி எப்போதும் என்னை சரியான பாதையில் கொண்டு செல்லட்டும். ஜனங்கள் எனக்கு விரோதமாய் செய்கிற தீமையான காரியங்களைக்கண்டால் கோபப்படாமல், அன்பின் மூலம் உம்மை வெளிப்படுத்த எனக்கு கற்பித்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000