Loading...

சகல தீமையான ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு

Shilpa Dhinakaran
23 Jan
அன்பு நண்பரே, இன்று உங்களுக்காக கர்த்தர் ஒரு வாக்குத்தத்தம் அளித்துள்ளார்.  “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர்” (சங்கீதம் 9:9). ஆம், நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவர் அடைக்கலமாக இருக்கிறார். நீங்கள் உலக மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம்; உங்கள் குடும்பம், மனைவி அல்லது குழந்தைகள் மீது நம்பிக்கையாயிருக்கலாம். ஆனால், ஆண்டவர் உங்களை பார்த்து 'என்னை நம்புங்கள். நான் உனக்கு அடைக்கலமாயிருப்பேன்’ என்று கூறுகிறார் . சங்கீதம் 27:5-ல் வேதம் சொல்லுகிறது, “தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்."
 
தேவன் உங்களை அவருடைய கூடாரத்தில் மறைத்து வைப்பார், அதாவது, எதுவும் உங்களை தொட முடியாது. இயேசுவுடன் சீடர்கள் படகில் சென்றதை நாம் அறிந்திருக்கிறோம். இயேசு படகில் இருந்தபோதிலும், கடலில் பெரும் புயல் வீசியது. பெரும் அலைகள் எழுந்தது. சீஷர்கள் அதை கண்டு பயந்தனர். ஆனால், இயேசு தமது கரத்தை உயர்த்தி காற்றை அதட்டினார்.
அவ்வாறே, தேவன்  இன்று உங்கள் படகில் வரப்போகிறார், உங்கள் வாழ்விலுள்ள அனைத்து பிரச்சனைகளையும் அவர் நிறுத்தப்போகிறார். நீங்கள்  அவரிடத்தில்  அடைக்கலம் தேடப் போகிறீர்கள். இந்த அற்புதமான வாக்குறுதிக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள் அன்பு நண்பரே, நீங்கள் இயேசுவிடம் அடைக்கலம் புகுந்தால், உங்களுக்கு எதிராக எதுவும் எழும்ப முடியாது. இந்த உலகத்தில் நமக்கு பிரச்சனைகள் இருக்கும். ஆனால், இயேசு இந்த உலகத்தை ஜெயித்தார். இன்று நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் சமாளிக்க ஜெயங்கொண்ட இயேசு உங்களுக்கு உதவுவார். இக்கட்டான நேரங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும் போதெல்லாம், பொறுமையாயிருந்து, அவர் தேவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த ஒருவரும் ஏமாற்றம் அடைந்ததில்லை. ஆகவே, மன உறுதியுடன் உங்கள் முழு நம்பிக்கையையும் அவர் மீது வைத்திடுங்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,

நீரே என் அடைக்கலம். என்னை ஒடுக்கும் ஜனங்களை நான் மன்னிக்கிறேன் ஆண்டவரே. ஒடுக்குமுறை மற்றும் பிரச்சனையிலிருந்து என்னைக் காப்பாற்றும். என் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து புயல்களையும் அடக்கும். என் கஷ்டங்களை உமது கரங்களில் அர்ப்பணிக்கிறேன். எனக்கு சமாதானம் அருளியதற்கு உமக்கு  நன்றி.

இயேசுவின் நல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000