Loading...
Paul Dhinakaran

திருப்திகரமான வாழ்க்கை

Dr. Paul Dhinakaran
12 May
அன்பு நண்பரே, இன்று தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதி வசனம் “நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” (சங்கீதம் 91:6). தேவன் நம்மை திருப்தியாக்குகிறவர். ஆம், நீங்கள் உண்ணக்கூடிய அனைத்தையும் அவர் திருப்தியாக்குகிறார். உங்களை அற்புதமாக நடத்திய கர்த்தருடைய நாமத்தை நீங்கள் துதிப்பீர்கள். யோவேல் 2:25,26ம் வசனம் கூறுகிறது, “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும் முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.”

.நீங்கள் இழந்த அனைத்தையும் தேவன் உங்களுக்கு திரும்பத்தருவார். மேலும், நீங்கள் சாப்பிட்டுத் திருப்தி அடையும்படி அவர் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் தருவேன் என்று கூறுகிறார். அவர் ஏன் அதை செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களை அதிசயமாக வழிநடத்திய கர்த்தருடைய நாமத்தை நீங்கள் துதிப்பதற்காகவே அவர் அதை செய்கிறார். அவர் உங்களை அற்புதமாக வழிநடத்திச் சென்று உங்களுக்கு உணவளிக்கப்போகிறார். இதனால் ஒவ்வொரு ஆசீர்வாதத்திலும் நீங்கள் திருப்தி அடைவீர்கள். “நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது” (சங்கீதம் 103:5). கர்த்தர் எல்லா நன்மையினாலும் உங்களை திருப்தியாக்குவார். “உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்” (சங்கீதம் 81:16) என்று கூறுகிறார்.
ஆம், தேவன் சகலத்தையும் உங்களுக்கு நன்மைக்கேதுவாகவே செய்து முடிப்பார் (ரோமர் 8:28). “அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்”(எரேமியா 32:40). உங்களுக்கு நன்மை செய்வதை தேவன் ஒருபோதும் நிறுத்தமாட்டார். நீங்கள் அவரைவிட்டு விலகிவிடாதபடி, அவருக்கு பயப்படும்படி உங்களை உற்சாகப்படுத்துவார். தேவன் தருகிற சகல நன்மையான காரியங்களும் அற்புதமாய் உங்கள் வாழ்வில் வந்து சேரும். ஆம் தேவன் உங்களை உச்சிதமான கோதுமையினாலும், கன்மலையின் தேனினாலும் திருப்தியாக்குவார். இயேசு என்ற கன்மலைக்குள் ஒளிந்திருக்கும் நன்மைகள் அனைத்தையும் அவர் உங்களுக்கு தருவார். இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர் உங்களை உயர்த்துவார். வாழ்க்கையின் உன்னத நிலைக்கு உங்களை உயர்த்தி திருப்தியாக்குவார். நீங்கள் எப்போதும் அவர் துதியை சொல்லி வருவீர்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,

இன்று நீர் எனக்கு அளித்த பெரிய வாக்குறுதிக்காக உமக்கு நன்றி. நீர் நீடித்த நாட்களால் என்னை திருப்தியாக்கி, என் வாழ்வின் தேவைகள் அனைத்தையும்  திருப்தியாக்குவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் என்னை உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்துவதற்காக உமக்கு நன்றி. என் மூலமாக உமது நாமம் மகிமைப்படட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000