Loading...
Stella dhinakaran

பாதுகாப்பான பரலோகம்

Sis. Stella Dhinakaran
04 May
என் விலையேறப்பெற்ற பிள்ளைகளே, தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1 யோவான் 5:18ல் வாசித்த வாக்குறுதியை இன்று நாம் தியானிக்கப்போகிறோம். “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்”  என்று வேத வசனம் கூறுகிறது. நீங்கள் சங்கீதம் 91: 1 மற்றும் 16ம் வசனங்கள் இவ்வாறு கூறுகிறன்றன, “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவரின் நிழலில் தங்குவான். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.”

தேவனுடைய பிள்ளைகளாக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எலிமெலேக்கின் குடும்பம். அவருடைய மனைவி நகோமி மற்றும் மோவாபில் வசிக்கச் சென்ற இரண்டு மகன்கள் பற்றி வேதத்தில் வாசிக்கிறோம். இரண்டு மகன்களும் மோவாபில் இருந்தபோது திருமணம் செய்து கொண்டனர். நகோமியின் மருமகள்களில் ஒருத்தி ரூத். அவள் தன் மாமியார் எப்போதும் சர்வவல்லமையுள்ள தேவனிடம் ஜெபிப்பதை கண்டாள். ஜீவனுள்ள தேவனை வணங்குவதன் அழகை கண்ட ரூத் கவரப்பட்டாள். எனவே, அவளும் தன் மாமியாரை பின்பற்றி அதே தேவனை வணங்குவதாக சொன்னாள். இவ்வாறு, அவள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்தாள். தேவன் ரூத்தை ஆசீர்வதித்து, இயேசுவின் பரம்பரையில் அவளும் இடம்பெரும்படி செய்தார்.
சர்வ வல்லவரின் நிழலின் கீழ் வரும்போது என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் வந்து உங்களில் வாசம்பண்ணுவார். சங்கீதம் 132:13-14ல் வேதம் கூறுகிறது, “கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.” ஆம், தேவன் எப்போதும் உங்களோடுகூடவே இருப்பார். மத்தேயு 28:20ல் “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.” நீங்கள் இறைவனிடம் கேட்டால், அவர் இப்போதும்கூட இந்த அனுபவத்தை உங்களுக்குத் தருவார். நீங்கள் அவருடைய பிள்ளையாக மாற விரும்புகிறேன் என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள். அவருடைய செட்டைகளின் கீழ் மறைத்துக்கொள்ளும்படி அவரிடத்தில் கேளுங்கள். 
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,

இன்று நீர் எனக்கு கொடுத்த இந்த அழகான வாக்குறுதிக்காக நன்றி. நீர் என் இருதயத்தில் வாசம்பண்ணும்படி தாழ்மையுடன் உம்மிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். நான் உமது பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். உமது பாதுகாப்பான சிறகுகளின் கீழ் என்னை மூடி மறைத்துக்கொள்ளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000