Loading...
Evangeline Paul Dhinakaran

தேவசித்தத்தின்படி இலக்கை நோக்கி ஓடுங்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
09 Nov
நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்காக எதையாகிலும் செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஆவிக்குரிய ஒன்பது வரங்களையும் அவர் அனைவருக்கும் அளிக்க ஆயத்தமாயிருக்கிறார். ஆனால், நம்முடைய திறமைக்கேற்ப தேவன் தமது வரங்களை பகிர்ந்துகொடுக்கிறார். ஆகவே, தேவசித்தத்தின்படி நாம் ஓடும்போது, பந்தயத்தில் ஜெயம்பெறுவதற்கு அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.

ஊழியத்தின் ஆரம்ப நாட்களில், நான் மிகவும் மெதுவாக பேசுவேன். இதனால் இயேசு அழைக்கிறார் ஊழியர்கள் ஒலிபெருக்கியின் சத்தத்தை அதிகரித்து வைப்பார்கள். அப்படியும் கூட்டத்தினர் ‘எங்களுக்கு கேட்கவில்லை, சத்தமாய் பேசுங்கள்’ என்று சொல்லுவார்கள். ஆனால், என்னுடைய தனிப்பட்ட ஜெப நேரத்தில் நான் சத்தமாக ஜெபிப்பேன். என் சகோதரி, ஒருமுறை என்னிடத்தில், “ நீ பேசும்போது மிகவும் மெதுவாக பேசுகிறாய். ஆனால் ஜெபிக்கும்போது எப்படி சத்தமாக ஜெபிக்கிறாய்?” என்று கேட்டாள். இதைக்கேட்ட நான் மிகவும் சோர்ந்துபோனேன். ஆண்டவரிடம் “என் கணவர் னுச. பால் தினகரனிடத்திலும், எனது மாமனார் (மறைந்த) க்ஷசடி.னு.ழு.ளு. தினகரன் மற்றும் என் மாமியார் ளுளை. ஸ்டெல்லா தினகரனிடத்திலும் நான் சத்தமாக பேசவேண்டும்” என்று ஜெபித்தேன். அந்நேரத்தில் ஒரு தம்பதியர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். இருவரும் தேவனுடைய வார்த்தையை தீர்க்கதரிசனமாக கூறி அனைவருக்கும் பிரார்த்தனை செய்தனர். அந்த சகோதரன் என் குடும்பத்திலுள்ள மற்ற அனைவருக்கும் பிரார்த்தனை செய்தார். அவருடைய மனைவி எனக்கு தனியாக ஜெபிக்க விரும்புவதாக கூறினார். அப்போது, “உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நீங்கள் பேசவேண்டிய விதத்தை குறித்து இனி ஜெபம் செய்யாதீர்கள். கர்த்தர் உங்களை வித்தியாசமாக பயன்படுத்த விரும்புகிறார்” என்று கூறி எனக்காக ஜெபித்தார்.”
ஆம், கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷித்த நோக்கத்தை வைத்திருக்கிறார். அதை நம் மூலமாக நிறைவேற்றும்படி நம்மை தெரிந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பயன்படுத்த விரும்புகிறார். ஆகவே, உங்கள் சூழ்நிலைகளை, செயல்பாடுகளை பார்க்காமல், கர்த்தர் உங்களிடத்தில் ஒப்புவித்த காரியங்களுக்கு உண்மையுள்ளவர்களாயிருங்கள். அப்பொழுது அவர் உங்களுக்கு மகிமையின் வாடாத கிரீடத்தை சூட்டுவார் (1 பேதுரு 5:4). சோர்வு, கைவிடப்பட்ட நிலை, தனிமை இவைகளில் ஒரு மனிதனும் உங்களுக்கு உதவமாட்டார்கள். விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் எப்போதோ பெற்ற வெற்றி அல்ல, ஒவ்வொரு நாளும் புதிய வெற்றிகளை காண்பீர்கள். ஆகையால், எபிரெயர் 12:1ன்படி, "....பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் .” அப்பொழுது நீங்கள் நிச்சயமாகவே ஜெயம் பெறுவீர்கள்! 
Prayer:
அன்பின் பரலோக பிதாவே,

 நீர் என்னோடிருந்து என்னை வழிநடத்துகிறபடியால் உமக்கு நன்றி. நீர் எனக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நான் உண்மையோடும், உத்தமத்தோடும், பொறுமையோடும் ஓடும்படிக்கு பெலனை தந்தருளும். உமது கிருபையினால் பொறுமையை எனக்கு தந்து என்னை வெற்றிச்சிறக்க செய்வீர் என்று நான் நம்புகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000