Loading...
Paul Dhinakaran

உயர்ந்த வெகுமதி!

Dr. Paul Dhinakaran
14 Aug
உங்கள் கரங்கள்பெலவீனமடையாதபடி, பெலப்படுத்துங்கள்.  ஏனெனில், உங்கள் கிரியைகளுக்கு பலனுண்டென்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆண்டவர் உங்கள் பட்சத்தில் நின்று உங்களோடுகூட செயலாற்ற நீங்கள் அனுமதிக்கும்போது, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியை காண்பீர்கள். நீங்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பீர்கள்; நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங்கீதம் 1:3). தனது தொழிலில் வெற்றியடையும்படி தேவன் ஒருவருக்கு எவ்வாறு உதவினார் என்பதை அவர் விவரிக்கிறார். 

“என் பெயர் டில்லி பாபு. நான் பாண்டிச்சேரியில் வசிக்கிறேன். என் தந்தை தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் இவ்வுலகைவிட்டு கடந்துசெல்லும்வரை அந்தத் தொழிலைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. திடீரென என் தந்தை மறைந்துவிட்டதால் நான் மட்டுமே அந்தத் தொழிலை பொறுப்பேற்று நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முன் அனுபவம் எதுவும் இல்லாத நிலையில், நான் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றிருந்தேன். எப்பக்கமும் கடன்கள் சூழ்ந்திருந்தன. எங்களுக்கு பொருள் கொடுத்தவர்களுக்கு பணத்தை எப்படி திரும்பக் கொடுப்பது என்ற வழி தெரியாமலிருந்தேன். அந்த நேரம் ‘இயேசு அழைக்கிறார்’ ஜெபகோபுரம் வந்து ஜெபித்தேன். தொடர்ந்து அங்கு வந்த நிலையில் என்னுடைய பிரச்சனைகளைக் கேட்ட ஜெப வீரர்கள் வணிக ஆசீர்வாதத் திட்டம் குறித்தும், அதற்கென்று நடக்கின்ற கூட்டங்கள் குறித்தும் எனக்கு அறிமுகம் செய்தார்கள். என்னுடைய வணிக நிறுவனத்தை ‘இயேசு அழைக்கிறார்’ வணிக ஆசீர்வாதத் திட்டத்தில் இணைத்தேன். என்னுடைய தொழிலுக்கென்று விசேஷமான பிரார்த்தனை ஏறெடுக்கப்பட ஆரம்பித்ததும், அந்தத் தொழிலை நடத்தக்கூடிய ஞானத்தை ஆண்டவர் எனக்குத் தந்து என்னை ஆசீர்வதித்தார். என் தொழில் ஆசீர்வதிக்கப்பட்டதன் மூலமாக நானும் ஆசீர்வாதமான நிலையை எட்டியிருக்கிறேன். வணிக ஆசீர்வாதத் திட்டம் மூலமாக எங்களை ஆசீர்வதித்த தேவனை குடும்பமாக துதிக்கிறேன். 
பிரியமானவர்களே, நம் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவிப்பதினால், “உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 31:16). உங்கள் தொழில் எதுவாயிருப்பினும் கர்த்தருக்கு பயந்து அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள், அவரைத் தேடுங்கள். அப்பொழுது மிகுதியான பலனை தேவன் உங்களுக்கு தருவார்.  நீங்கள் முதலாளியாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் ஞானத்திற்காக தேவனையே  சார்ந்திருங்கள். நிச்சயமாகவே  நீங்கள் ஒரு  பெருக்கத்தை காண்பீர்கள். “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29). உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள்! போவாஸ் ரூத்தை ஆசீர்வதித்து கூறியதாவது, “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக” (ரூத் 2:12) என்றான். நீங்கள் தேவனுடைய அடைக்கலத்தின்கீழ் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் வெகுமதிகளும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18). நீங்கள் பெரிய வெகுமதிகளை காண்பீர்கள்.
Prayer:
அன்பின் தேவனே,

நான் உதவியற்ற நிலையில் உம்மண்டையில் வந்திருக்கிறேன். என்னால் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. உமது ஞானத்தினால் தான் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும். தோல்விகளை மேற்கொள்ளும் பெலனையும் ஞானத்தையும் நீர் எனக்கு தந்து, என்னை வழிநடத்தும். உமது நாம மகிமைக்காக எனக்கு வெற்றியை தந்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000