Loading...
Evangeline Paul Dhinakaran

சுத்திகரிக்கப்பட்ட பொன்

Sis. Evangeline Paul Dhinakaran
11 May
அன்பு நண்பரே, இன்றும் லேவியராகமம் 22:32-ன்படி, கர்த்தர் உங்களை பரிசுத்தமாக்குவார். ஒவ்வொரு நாளும் உங்களை பரிசுத்தமாக்க நீங்கள் முயற்சி செய்து வருகிறீர்கள் அல்லவா? வெளிப்படுத்தல் 22:11-ல், “பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” என்று வேதம் கூறுகிறது. இந்த பாவ உலகில், நாம் பல சோதனைகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறோம். 2 தீமோத்தேயு 3:12ல் வேதம் கூறுகிறது, “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”

தேவனுடைய பிள்ளைகள் தேவராஜ்யத்தில் பிரவேசிக்க பல இன்னல்களை சந்திக்க வேண்டும். இது உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்வதற்கு தேவனுடைய திட்டமாயிருக்கிறது. ஆகையால், ஒவ்வொரு முறையும் நீங்கள் துன்பத்தின் வழியாக கடந்து செல்லும்போது, “ஆண்டவரே நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்” (சங்கீதம் 119:71) என்று சொல்லுங்கள். யோபு துன்பத்தை அனுபவித்தபோது தைரியமாக, “அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10) என்று கூறினார்.
ஆகையால், என் நண்பரே பொறுமையாயிருங்கள். இந்த பாவ உலகிலுள்ள எல்லா துன்பங்களையும் தாங்கிக்கொள்ளுங்கள். உங்களை பரிசுத்தமாக்குவதற்கு தேவன் உங்களை நடத்துகிற வழி இது. அவர் அசுத்தங்களை உங்களைவிட்டு நீக்கிய பின், ஒரு குயவன் ஒரு பாத்திரத்தை அழகாய் உருவாக்குவதுபோல, கர்த்தரும் உங்களை பரிசுத்த பாத்திரமாய் உருவாக்குவார். கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள். இன்றும், இந்த வார்த்தை உங்கள் வாழ்வில் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம். 
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,

உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும்.  என் வாழ்க்கையை உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன், என்னை பரிசுத்தப்படுத்தும். ஆண்டவரே, உமது பிரசன்னம் என் வாழ்வை நிரப்பும்படி ஜெபிக்கிறேன். உமது பரிசுத்தத்தினாலும் நீதியினாலும் என்னை நிரப்பும். துன்பங்களை தாங்கும்படி என்னை பலப்படுத்தும். சோதனைகளை சகிக்கவும் தாங்கவும் பெலன் தாரும். ஜனங்கள் என்னில் உம்மை காணும்படி என்னை மறுரூபப்படுத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000