Loading...
Samuel Paul Dhinakaran

தெய்வீக பெலன்

Samuel Dhinakaran
13 May
என் நண்பரே, இன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்த நாளாயிருக்கட்டும். நீங்கள் இயேசு அழைக்கிறார் காலண்டரையோ அல்லது எங்கள் வலைத்தளத்தையோ பார்த்திருந்தால், அதில் அன்றைய நாளுக்குரிய வாக்குறுதியை பார்த்திருப்பீர்கள்.  இன்று உங்களுக்கு மிக அழகான வாக்குறுதிகளில் ஒன்றை தேவன் கூறுகிறார். இது 2 கொரிந்தியர் 12:9ல் காணப்படுகிறது. “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று இயேசு கூறுகிறார். இந்த வார்த்தைகள் அப்போஸ்தலர் பவுலிடம் பேசப்பட்ட வார்த்தைகள். பவுல் ஒரு குறிப்பிட்ட பலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது, அவரை குணமாக்கும்படி மூன்று முறை ஜெபித்தார். ஆனாலும், தேவன், பவுல் அப்போஸ்தலனிடம்  என் கிருபை உனக்கு போதுமானதாக இருக்கும் என்றும் உன் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்று பதிலளித்தார்.
 
ஒரு குறிப்பிட்ட நாளில், நான் முற்றிலும் பலவீனமாக உணர்ந்தேன். ஞாயிறு ஊழியத்தில் என்னால் ஆராதனைகூட செய்ய முடியவில்லை. எனக்கு தாங்க முடியாத தலைவலி இருந்தது. ஆனால், தேவன் என்னிடம் பாடும்படி கூறினார். அவருடைய கிருபை என்னை தாங்கும் என்றார். என் பலவீனத்தின் மத்தியில் நான் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, சென்று பாடினேன். என்ன நடந்தது தெரியுமா? ஆச்சரியமாக தேவனுடைய தெய்வீக வல்லமையை நான் பெற்றேன். அந்த பாடலை ரசித்து பாட ஆரம்பித்தேன். மகத்தான அபிஷேகத்தை அனுபவித்தேன். இது நம்முடைய சொந்த பெலத்தால் சாத்தியமற்றதாக காணப்படலாம். ஆனால், தேவ கிருபையானது, காரியங்களைச் செய்யும்படி உங்களுக்கு தெய்வீக பெலத்தை தருகிறது.
என் நண்பரே, இன்று நீங்கள் எதைக்குறித்தாகிலும் கவலைப்படுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கான பலமோ திறமையோ உங்களிடம் இல்லை என்று சொல்லுகிறீர்களா? ஒரு பணியை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்கு திறமை இல்லையா? சொற்பொழிவின்போது பேச இயலாமை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறதா? எந்தவொரு காரியத்தில் உங்களுக்கு பெலவீனம் காணப்பட்டாலும், தேவன் உங்களுக்கு கிருபையை தருகிறார். இயேசுவுக்குள் மறைந்திருக்கிற ஞானம், வல்லமை, பெலன், திறமைகள் மற்றும் அறிவு அனைத்தும் உங்களுக்கு கொடுக்கப்படும். தேவகிருபை மிகவும் முக்கியமானது. நீங்கள் தேவனிடத்தில் கேட்கும்போது, நிச்சயமாக பலத்தை பெற்றுக்கொள்வீர்கள். வாருங்கள் தேவனிடத்தில் கேட்டு இந்த கிருபையை பெற்றுக்கொள்வோம்.
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,

இன்று நீங்கள் எனக்கு கொடுத்த அற்புதமான வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, என் பலவீனம் அனைத்திலும் உமது பெலன் போதுமானதாக இருக்க அருள்புரியும். நீர் எனக்குக் கொடுத்திருக்கும் ஞானத்துக்கும் பலத்துக்கும் உமது கிருபையை நாடுகிறேன். வல்லமையான காரியங்களை செய்து, உமது நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவர எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் ஜெபிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000