Loading...
Dr. Paul Dhinakaran

இயேசுவின் நாமம் மேலான நாமம்!

Dr. Paul Dhinakaran
19 Oct
“இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்” பிலிப்பியர் 2:10
அன்பானவர்களே, இந்த உலகத்தில் “இயேசு” என்னும்  நாமத்தைக் காட்டிலும் மேலான நாமம் வேறு இல்லை. அதுவே ஒரு மனிதனை மாற்றி, அவனை ஆசீர்வதித்து பாதுகாக்கிறது. நீங்கள் என் நாமத்தினாலே எதை கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:13,14) என்று  இயேசு சொல்லிக்கொடுத்தார். இயேசுவின் பெயரில் செய்யப்படும் அந்த ஜெபத்தை ஒரு மனிதனாலும், எந்த பிசாசின் சக்தியாலும் ஒரு நாளும் நிறுத்த முடியாது!
‘ஒரு குருவின் மரணம்’ என்ற நூலை, பிரபலமான ஒருவர் எழுதி வெளியிட்டார். ஆரம்பகால வாழ்க்கையில், இயேசுவைப்பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரது தாயார், மரணத்தருவாயில் தனது மகனிடம், “வாழ்க்கையில் உனக்கு உதவி என்று தேவைப்படும்போது, இயேசுவை நோக்கிக் கூப்பிடு; அவர் எந்தவித கவலையையும் மாற்றிப்போடுவார்” என்று கூறினார்கள். அந்த வார்த்தைகள் அவர் இருதயத்தில் பதிந்துவிட்டது. ஒருநாள், கட்டு விரியன் பாம்பு ஒன்று அவரை தாக்க வந்தபோது, அவர் செய்வதறியாது திகைத்த வேளையிலே, தன் தாயாரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, உடனே ‘இயேசுவே’ என்று கூப்பிட்டார். அப்படியே அந்த பாம்பு அங்கிருந்து விலகிச்சென்றது.
ஓருமுறை மதுரையில் 'இயேசு அழைக்கிறார்" நற்செய்திக் கூட்டங்கள் நடந்தபோது, ஒருநாள் நான் நூற்றுக்கணக்கான பங்காளர்களை தனித்தனியே சந்தித்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது, "ஒரு சகோதரி, இருதய வலியினால் கஷ்டப்படுகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் செய்து பார்த்தும், வலியின் காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, நீங்கள் அந்த சகோதரிக்காக முதலாவது ஜெபியுங்கள்" என்று என்னிடம் கூறினார்கள். நானும் "அவர்களை அழைத்து வாருங்கள்" என்று கூறினேன். அந்த சகோதரி, என் அருகில் வருவதற்கு முன்பே திடீரென்று கூக்குரலிட ஆரம்பித்தார்கள். மற்றவர்களால் அந்த சகோதரியை அடக்கவே முடியவில்லை. நானோ,"அவர்களை விட்டு விடுங்கள்; அவர்கள் விடுதலை பெறுவார்கள்" என்று கூறிவிட்டு, அந்த சகோதரியை அலைக்கழிக்கும் அசுத்த ஆவி அவர்களை விட்டு அகலும்படி இயேசுவின் நாமத்தில் கடிந்து கொண்டேன். உடனே அவர்கள் பரிபூரண சுகம் அடைந்தார்கள்.
ஆம், இயேசுவின் நாமம் வல்லமையும், அதிசயமானது. இயேசுவின் நாமத்தில் பாதுகாப்பும், விடுதலையும், ஆசீர்வாதங்களும் உண்டு. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும்  முடங்கும் (பிலிப்பியர் 2:10). இயேசுவின் நாமம் பலத்த துருகமும், கேடகமுமாய் இருக்கிறது (நீதிமொழிகள் 18:10). ஆகவே, இன்றைக்கு அவரை தியானித்து, அவர் நாமத்தில் வெற்றியை பெற்றுக்கொள்ளுங்கள். சகல நன்மைகளும் இயேசுவின் நாமத்தில் உள்ளது.
Prayer:
என்னை நேசிக்கும் பரம தகப்பனே,
இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது நாமம் வல்லமையுள்ளது. இன்றைக்கும் என்னுடைய கையின் பிரயாசத்தையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உமது பாதுகாப்பையும், ஆசீர்வாதங்களையும் எனக்கு தாரும். உம்முடைய நாமத்தை சொல்லி கேட்கிற யாவற்றையும் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்னீரே, உம்முடைய நாமத்தின் வல்லமையை நானும் ருசித்துப்பார்க்க அருள்புரியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

 

For Prayer Help (24x7) - 044 45 999 000