Loading...
Evangeline Paul Dhinakaran

பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் தேவன்

Sis. Evangeline Paul Dhinakaran
18 Sep
அன்பு நண்பரே, சங்கீதம் 5: 2 -ன் படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே, தாவீது,  "நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்" என்று சொல்லுகிறான்.  இன்றும் கூட, ‘கர்த்தாவே, என் அழுகைக்குப் பதில் சொல்லும்’என்று நீங்கள் சொல்லலாம். ஜெபிக்க எனக்கு போதுமான பெலன் இல்லை என்று சொல்லலாம். ’ஒரு நாள், இரவு தேவன் என்னுடனே பேசினார். ஏசாயா 10:30 ல் உள்ள வசனத்தை எனக்குக் கொடுத்தார். “காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு.” இந்த வசனம் எனக்குப் புரியவில்லை, ஆனால் நான் ஜெபித்தபோது, கர்த்தர் எனக்கு விளக்கம் கொடுத்தார். கர்த்தர் என்னை மேலும் ஜெபிக்கும்படிக்கும், என் குரலை உயர்த்தி அவரிடம் மன்றாடவும்  கேட்கிறார். அந்த நாளிலிருந்து,  என் பிரார்த்தனை நேரத்தை அதிகரித்தேன், என் பிரார்த்தனை வாழ்க்கையில் அநேக காரியங்களில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவந்தது. என் பிரார்த்தனைகளுக்கு தேவன் கிருபையுடன் பதில் அளித்து வந்தார். பல சமயங்களில், நான் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் உடனடியாக ஒரு அற்புதத்தை நிகழ்த்துவார். அதுபோல, உங்கள் ஜெபத்திற்கும் கர்த்தர் பதிலளிப்பார்.

எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டிருந்தபோது, தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பி, எசேக்கியா ராஜாவுக்கு தீர்க்கதரிசனம் சொல்லச் சொன்னார். ஏசாயா 38: 1ல் "அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். " எசேக்கியா ராஜா என்ன செய்தார் தெரியுமா? எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாக  திருப்பி, கர்த்தரிடம் பிரார்த்தனை செய்தார், "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்."
அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது: நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன் (ஏசாயா: 38: 5) என்றான். கர்த்தர் எசேக்கியாவை குணமாக்கியது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்க்கையில் பதினைந்து வருடங்களையும் அதிகமாக்கினார். நீங்களும் இப்படி சத்தமாக அழுகிறீர்களா? உங்கள் அழுகைக்கு தேவன் பதிலளிப்பார் அன்பு நண்பரே. இன்று, உங்கள் ஜெபங்களுக்கு ஒரு பதிலைக் கொடுப்பதாக கர்த்தர் உறுதியளிக்கிறார். வாருங்கள் அவரிடத்தில் பிரார்த்தனை செய்வோம்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. உமது வாக்குறுதியின்படி, தயவுசெய்து என் அழுகையைக் கேட்டு, என் பிரார்த்தனைக்குப் பதிலளித்தருளும். தகப்பனே, என் உடல்நலத்தில், பொருளாதாரத்தில் மற்றும் குடும்பத்தில் ஒரு அதிசயத்தைச் செய்தருளும். நான் நினைப்பதற்கும் மேலாக நீர் என்னை ஆசீர்வதிப்பதற்காக  நன்றி தகப்பனே.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000