Loading...
Paul Dhinakaran

ஜெபியுங்கள்! துதியுங்கள்! நன்றி சொல்லுங்கள்!

Dr. Paul Dhinakaran
14 May
என் அருமை நண்பரே, கர்த்தர் உங்கள் ஆசீர்வாதத்திற்காக ஏற்கனவே எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்துள்ளார். இன்றைய வாக்குத்தத்தம் சங்கீதம் 45:17-லிருந்து வருகிறது. அதில் சங்கீதக்காரன் கூறுகிறான், “உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் துதிப்பார்கள்.” என் நண்பரே, நீங்கள் தேவனுடைய  ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பது மட்டுமல்லாமல், அவரைத் துதிக்கவும்,  அவர் செய்ததற்காக நீங்கள் அவருக்கு நன்றி சொல்லவும் வேண்டும்.
 
அவர் யார், அவருடைய மகிமை, அவருடைய வல்லமைக்காகவும், அவர் செய்த சகல நன்மைகளுக்காகவும்  அவரைத் துதியுங்கள். மேலும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நீங்கள் அனுபவிக்கும்படி  உங்களுக்கு கொடுத்ததற்காக  நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பொழுது, உங்கள் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். ஆகவே, இந்த மூன்றையும் நினைவிற்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனுடைய சந்நிதிக்கு வரும்போது, அவர் சர்வவல்லவர்  என்பதற்காக அவரைத் துதியுங்கள்.
நீங்கள் அவரை மேலே உயர்த்தும்போது, ​​உங்கள் வாழ்க்கையில் அவரை வல்லமையுடைவராக அனுபவிப்பீர்கள். “ஆண்டவரே, நீரே வல்லமையுள்ள தேவன், எல்லா மலைகளையும் உடைக்கும் சகல வல்லமையும் உமக்கு உண்டு” என்று நீங்கள் கூறும்போது, ​​அவர் உங்கள் வாழ்க்கையில் வல்லமையுள்ள தேவனாக, தம்முடைய வல்லமையைக் காட்டி, உங்கள் வாழ்விலுள்ள ஒவ்வொரு மலையையும் உடைப்பார். "நீர் என்மீது வைத்த மிகுந்த அன்பிற்காக நான் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்" என்று நீங்கள் கூறும்போது, ​​அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி உங்கள் இருதயத்தில் நிரம்பி வழிவதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் இவ்வுலகில் உங்கள் வாழ்வில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் நன்றி செலுத்துவீர்கள். அவர் உங்களுக்கு வழங்கிய குடும்பத்திற்காக, உங்கள் வேலைக்காக, உங்கள் போஷிப்புக்காக அவருக்கு  நன்றி செலுத்துங்கள், அப்பொழுது தேவ ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் பெருகும்.  நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தும்போது, ​​தேவகிருபை பெருகும். மேலும், இவ்வுலக காரியங்களிலும், ஆன்மீக காரியத்திலும் நீங்கள் பெருகுவீர்கள். மூன்றாவதாக, தேவசித்தம் செய்யவேண்டும். தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், ​​அதைக்குறித்த தேவசித்தத்தை உங்களுக்குக் காண்பிக்கும்படி அவரிடத்தில் கேளுங்கள். கர்த்தர் அதைக் காண்பிப்பார். நீங்கள் தேவசித்தத்தின்படி செய்யும்போது, ​​கர்த்தர் கிரியை செய்வார். மேலும், தேவ வல்லமை உங்கள் வாழ்வில்  நிறைவேறும். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. பிதாவே, நீர் வல்லமையுள்ளவர். ஆற்றல்மிக்கவர், இரக்கமுள்ளவர் மற்றும் நித்திய தேவன் என்பதற்காக நான் உம்மைத் துதிக்கிறேன். தகப்பனே, நீர் என் வாழ்வில் அளித்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. தகப்பனே, என் தேவைகளையும் சோதனைகளையும் நீர் அறிவீர். ஆண்டவரே,  உமது விருப்பத்தை எனக்குக் காண்பித்தருளும். அதை நிறைவேற்ற எனக்கு உதவும். உமது நாமம் மகிமைப்படட்டும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000