Loading...

எக்காலத்திலும் கர்த்தரை துதியுங்கள்

Shilpa Dhinakaran
20 Oct
இன்றைய வாக்குறுதி சங்கீதம் 51:15லிருந்து எடுக்கப்பட்டுள்ளது. "ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்" என்று வேதம் கூறுகிறது. ஆம், என் அன்பு நண்பரே, இந்த வாக்குறுதியின்படி, உங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும், எந்த கவலை உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவனை துதித்து நன்றி தெரிவிப்பது மட்டுமே. 

என் மகள் கேட்லின் பிறந்தபோது, நாங்கள் அவளை முதல் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றோம். மருத்துவர்கள் அவளை பரிசோதித்து முடிந்தபின், அவளது கால்களில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக கூறினார்கள். அவர்கள் அவளை மீண்டும் ஒரு முறை பரிசோதிக்க வேண்டுமென்று கூறினார்கள். நாங்கள் பயந்து கவலைப்பட்டாலும், அவள் தேவனிடமிருந்து வந்த ஈவு எந்தவொரு தீங்கும் அவளை தொட முடியாது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எங்கள் மனதில் கவலைகள் இருந்தபோதிலும், நாங்கள் தேவனை துதித்து, கேட்லினுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டே இருந்தோம். என்ன  நடந்தது தெரியுமா? அடுத்த முறை நாங்கள் அவளை பரிசோதனைக்கு அழைத்துச்சென்றபோது, அவளது கால்கள் சரியாக இருக்கிறது. அவள் நன்றாக இருக்கிறாள். எந்தவொரு குறைவும் இல்லை. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவர் கூறினார். 
ஆகவே, அன்பு நண்பரே, உங்கள் வாழ்க்கையிலும் இது நடக்கும். என்ன பிரச்சினைகள் இருந்தாலும், கர்த்தருக்கு நன்றி செலுத்துவதும் அவரை துதிப்பதையும் தொடருங்கள். கர்த்தர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்வார். எரிகோவின் சுவர்களைப் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். தேவன் அந்த கோட்டையின் சுவரை சுற்றிலும் அணிவகுத்து துதித்துக்கும்படி கூறினார். இஸ்ரவேலர் அவ்வாறு செய்தபோது, எரிகோ கோட்டை கீழே விழுந்தது. அதுபோலவே, கர்த்தர் இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:18 கூறுகிறது, "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ஆகவே, உங்கள் சூழ்நிலைகளை பார்க்காமல், கர்த்தரை நோக்கிப்பார்த்து அவருக்கு நன்றி பலிகளையும், துதிகளையும் ஏறெடுத்துக்கொண்டேயிருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Prayer:
ஆண்டவரே, 

இந்த வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே நான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் எதுவாயிருப்பினும், எப்போதும் உங்களுக்கு நன்றி செலுத்துவதற்கும், உம்மை துதித்து பாடுவதற்கும் உதவிச்செய்தருளும். கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கை எப்போதும் உமது கட்டுப்பாட்டில் இருப்பதால் எனக்குள் ஒரு பூரண சமாதானத்தை கட்டளையிடும். என் உதடுகளினால் எப்போதும் உமக்கு நன்றியும் துதியும் ஏறெடுக்க கிருபை செய்தருளும். உமது வாக்குறுதிகள் என் வாழ்வில் பூரணமாய் நிறைவேற கிருபை செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000