Loading...

பூரண சமாதானம்

Shilpa Dhinakaran
17 Jan
அன்பின் தகப்பனே, இன்றைய வாக்குத்தத்தம் ஏசாயா 32:17-லிருந்து எடுக்கப்பட்டது, "நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்." ஆம், நீங்கள் தேவனுடைய கண்களுக்கு முன்பாக நீதியான வாழ்க்கை வாழ்ந்ததால், கர்த்தர் இன்று உங்களுக்கு சமாதானத்தை வாக்களிக்கிறார். அவர் இன்று உங்கள் குடும்பத்தை  சமாதானத்தால் நிரப்பப்போகிறார். உங்கள் குடும்பத்தில் உங்களை  தவறாக  புரிந்து கொண்டிருக்கலாம். உங்கள் குடும்பம் பிரிந்திருக்கலாம். ஆனாலும், இன்று உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தால் நிரப்புவேன் என்று கர்த்தர் கூறுகிறார்.
 
எதிர்காலத்தைப் பற்றிய பயம் உங்களுக்கு இருக்காது என்று தேவன் கூறுகிறார். உங்கள் எதிரிகளுக்கு பயமிருக்காது. உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றிய பயமும் உங்களுக்கு இருக்காது. சங்கீதம் 112:7, 8-ல் நாம் வாசிக்கிறோம், “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்." ஆம், தேவன் சமாதானத்தால் உங்கள் வாழ்க்கையை நிரப்புவதால் உங்களுக்கு எந்த பயமுமிருக்காது.
இதை என் அத்தையின் வாழ்க்கையிலும் பார்த்தேன். அவர்கள்  மிக இளம் வயதிலேயே தன் கணவனை இழந்தவர்கள். ஆனால் அவள், “ஆண்டவர் என்னுடன் இருப்பதால் நான் எதற்கும் அஞ்சமாட்டேன்” என்றார்கள். நாங்கள் அவர்களை குறித்து மிகவும்  கவலைப்பட்டோம், அவர்கள் எப்படி பிழைக்கப் போகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கர்த்தருடைய சமாதானம் அவர்களுடைய வாழ்க்கையையும், அவர்களுடையகுடும்பத்தையும் நிரப்பியது. அவ்வாறே, இன்று கர்த்தர் தமது சமாதானத்தை உங்களுக்கும்  வாக்களிக்கிறார். சமாதான பிரபு  அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார். ஆகவே கர்த்தருடைய சமாதானத்தை விசுவாசத்துடன் பெற்றுக்கொள்ளுங்கள். வேதத்தில் மற்றொரு வசனமும் உள்ளது. "உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசாயா 26:3). நீங்கள் தேவனுடைய சமாதானத்தில் நடக்கும்போது பெரிய காரியங்கள் நிச்சயம் நடக்கும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
உமது வார்த்தையின் மூலம் என்னை ஆறுதல்படுத்தியதற்கு நன்றி. உமது சமாதானத்தையும்  மற்றும் பாதுகாப்பையும் எனக்கு உறுதியளித்ததற்கு நன்றி. ஆண்டவரே என் இருதயத்திலிருக்கும்  எல்லா பயத்தையும் நீக்கியருளும். நீர் நீதி செய்கிற தேவன் என்பதற்கு நன்றி. உமது பிரசன்னம் என்னுடன் இருப்பதற்கு நன்றி, அதுதான் எனக்குத் தேவை. உமது பரிபூரண சமாதானத்தால் எப்போதும் வழிநடத்தப்பட எனக்கு உதவும். இயேசுவின் நல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000