Loading...
Paul Dhinakaran

ஏற்ற ஆசீர்வாதங்கள்

Dr. Paul Dhinakaran
14 Oct
என் அருமை நண்பரே, இன்று தேவனுடைய வாக்குத்தத்த செய்தி,  எசேக்கியேல் 34:26 லிருந்து வருகிறது. தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதி, "நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்."  என் நண்பரே, நீங்கள் தேவனுடைய சீயோன் மலை. தேவன் சீயோனை நேசிக்கிறார். நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பதால், நீங்கள் தேவனுடைய வாசஸ்தலமாக இருக்கிறீர்கள்! ‘நான் இருக்கும் இடத்தில், ஒரு ஆசீர்வாதம் இருக்கிறது' என்று கர்த்தர் கூறுகிறார். அதனால்தான் தினமும் அதிகாலையில் நீங்கள் அவரைத் துதிக்கவேண்டும்.

தேவன்  உங்களை ஆளுகிறவர். அவருடைய சிறகுகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கிறது.  நீங்கள் தேவனுடைய மலை என்பதால், இது உங்களுக்கு கிடைக்கும்  ஆசீர்வாதம்.  "ஏற்ற காலத்திலே ஆசீர்வாதமான மலை பொழியும்." பிரசங்கி 3:11-ல், "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்" என்று வேதம் கூறுகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய அறுவடையைக் காணும்படி, கனிகளை ருசிக்கும்படி நான் ஏற்ற நேரத்தில் மழையை  அனுப்புவேன்.
எசேக்கியேல் 34 மற்றும் யோவேல் 2:23-ல், 'அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்' என்று வேதம் கூறுகிறது. ஆகவே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சந்தோஷமாயிருங்கள். ஏனென்றால், தேவன் உங்கள் மலையை அலங்கரிக்க உண்மையுள்ளவராயிருக்கிறார். இது தான் உங்கள் இருதயம்! ஏசாயா 60:22-ல் தேவன்  கூறுகிறார், "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்." தேவன் உங்கள் முன்மாரியையும் பின்மாரியையும் ஆசீர்வதித்து,  உங்களை மகிழ்விப்பது மட்டுமல்ல, அவர் உங்களை ஆயிரமாக உயர்த்துவார். ஆகவே, பயப்பட வேண்டாம். இயேசு உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவருடைய சீயோன் மலை.  ஆசீர்வாத மழையால் அவர் உங்களை கனப்படுத்துவார்.  
Prayer:
அன்பின் தகப்பனே, 

இன்றைய வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. நீர் என் இருதயத்தில் வாசம்பண்ணி, அதை உமது சீயோன்  மலையாக மாற்றுமாறு கேட்கிறேன். ஏற்ற நேரத்தில் நீர் எனக்கு ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அனுப்புவீர் என்பதை அறிந்து, உமது அன்பில் நான் எப்போதும் மகிழ்ச்சியடையட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000