Loading...
Evangeline Paul Dhinakaran

உங்களுக்கு சமாதானம்!

Sis. Evangeline Paul Dhinakaran
17 Aug
இயேசுவை பார்க்க திரளான ஜனங்கள் வந்து மூன்று நாட்கள் அவரோடிருந்தார்கள். அவர் அவர்களுக்காக மனதுருகினார். “நான் இவர்களுக்காக பரிதபிக்கிறேன். மூன்று நாட்கள் பட்டினியாய் இருக்கிறார்களே. அவர்களை பட்டினியாய் அனுப்பிவிடமாட்டேன். வழியிலே சோர்ந்துபோவார்கள்” என்று சொல்லி, அவர்களுக்கு போஜனம் கொடுத்து, திருப்தியாக சாப்பிட வைத்து அனுப்பினார் (மத்தேயு 15:32,37). அவருக்காக காத்திருக்கும் உங்களையும் அவர் அப்படியே மனதுருக்கத்தோடு கண்ணோக்குகிறார். ஆகவே, உங்கள் குறைவுகளையெல்லாம் நிறைவாக்கி உங்களை திருப்தியாக்கப்போகிறார். ஆம், கர்த்தர் ஆசீர்வதிக்க ஆரம்பித்துவிட்டால், யாராலும் அதை நிறுத்த முடியாது. கர்த்தர் உங்கள் குறைவுகளை நீக்கி உங்களுக்கு ஆரோக்கியத்தையும் செழிப்பையும் தரப்போகிறார். ஆகையால் சந்தோஷமாயிருங்கள்!

ரெஜினா என்ற ஒரு சகோதரி எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள், “நான் கருத்தரித்திருக்கிறேன். என் குடும்பத்தில் நான் ஒருத்திதான் சம்பாதிக்கிறேன். என் கணவருக்கு வேலை இல்லை. நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். வீட்டில் அநேக வேலைகள் செய்யவேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் என் வயிற்றில் பிள்ளை வளர்கிறது. வீட்டு வேலைகளை செய்வதோடு, எல்லாருக்கும் உதவியும் செய்யவேண்டும். ஓடி ஓடி வேலை செய்து சோர்ந்துபோனபடியினால், என்னால் தாங்க முடியாமல், எல்லாரையும் விட்டுவிட்டு என் அம்மா வீட்டுக்குப் போய்விட்டேன்.  தற்பொழுது குடும்பத்தில் சமாதானம் இல்லை. திரும்பவும் என் குடும்பத்தில் சமாதானம் வேண்டும் என்று ஜெபியுங்கள்” என்று கேட்டிருந்தார்கள். ‘ரெஜினா’ என்ற பெயரை பார்த்ததும் எனக்கு என்னுடைய அக்காவின் ஞாபகம் வந்தது. அவர்கள் பெயரும் ரெஜினா தான். நான் அந்த சகோதரியை என் சொந்த அக்காவைபோல நினைத்து, அந்த கடிதத்தின் மேல் கை வைத்து, “ஆண்டவரே, இந்த சகோதரிக்கு இரங்கும். எப்படியாயினும் அந்த சகோதரிக்கு விடுதலையை தாரும்” என்று மனதுருக்கத்தோடு ஜெபித்து, பதில் எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம்! சில நாட்கள் கழித்து, அவர்கள் திரும்ப, “உங்கள் கடிதம் என் கைக்கு வருவதற்கு முன்பே, என்னுடைய கணவர் என்னை தன்னுடன் வீட்டிற்கு கூட்டி சென்றார். எனக்கு என்று ஒரு தனிவீடு இருக்கிறது. நானும் என் கணவரும் பிள்ளையுமாக சுகமாக, இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” என்று எனக்கு பதில் கடிதம் எழுதினார்கள். எத்தனை அருமையான ஒரு சாட்சி பாருங்கள்.
சூழ்நிலைகளின் வழியாக கடந்து சென்றாலும் தேவன் அதை சமாதானமாக மாற்றுவார். மேற்கண்ட சாட்சியின்படியே கர்த்தர் உங்களுக்கும் இரங்குவார். ஆம், அவர் நம்மை காண்கிற தேவனாக இருக்கிறார். அவர் உங்களை தமது சமாதானத்தினால் நிரப்புவார். “உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக” (சங்கீதம் 122:7) என்று வேதம் கூறுகிறது. தேவன் விரும்புகிறதுபோல, உங்கள் அலங்கத்திற்குள்ளும், உங்கள் குடும்பத்தினரிடமும் சமாதானம் தங்கும். ஒவ்வொரு முறையும் இயேசு தமது சீஷர்களைச் சந்தித்தபோது, அவர் ‘உங்களுக்கு சமாதானம்’ என்று கூறினார். அவர் இன்று உங்களைப்பார்த்தும், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று கூறுகிறார்.
Prayer:
அன்பான ஆண்டவரே,

இன்றும் உங்கள் சமாதானத்தை நீர் எனக்கு உறுதியபடுத்தியதற்காக உமக்கு நன்றி. தேவனே, என் நிலைமையை நீர் அறிந்திருக்கிறீர். நீர் மட்டுமே அதை மாற்ற முடியும். உமது சமாதானம் என் இருதயத்திலும் என் குடும்பத்திலும் ஆளுகை செய்யட்டும். என் வார்த்தைகளும், கிரியைகளும் உமது அன்பினால் நிறைந்ததாக இருக்கட்டும். என்னைச் சுற்றிலும் வாழ்கிறவர்களோடு நான் சமாதானத்தோடே வாழ கிருபை செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000