செழிப்பும், சமாதானமும்
Shilpa Dhinakaran
30 Oct
அன்பு நண்பரே, தேவன் அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குவார் (சங்கீதம் 147:14). கர்த்தர் உங்கள் குடும்பத்திலும், வேலை ஸ்தலத்திலும், அண்டை அயலகத்தாரிடத்திலும் சமாதானத்தை அருளுவார். மனம் கலங்காதிருங்கள்! எந்தவொரு தீங்கும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. ஒரு ராஜா தனது தேசத்தில் உள்ள அனைவருக்கும் சமாதானத்தை அளிக்கும் ஒரு கதை என் நினைவில் வந்தது. அவர் தனது நாட்டு மக்களிடம் உங்களுக்கு சமாதானத்தை அளிக்கக்கூடிய காரியத்தை படமாக வரைந்து கொண்டு வாருங்கள் என்றார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான காரியங்களை வரைந்து கொண்டு சென்றனர். சிலர் மலைகளை வரைந்தனர். மற்றவர் பூக்களை, பறவைகளை என்று வித்தியாசமான காரியங்களை வரைந்து கொண்டு சென்றனர்.
ஆனால், அதில் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை பார்த்தபோது, அதில் அழகான மலைகள் மற்றும் ஆறுகளை கண்டார்கள், இந்த ஓவியம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ராஜா அந்த தலைப்புக்கு பொருத்தமான வித்தியாசமான ஒரு ஓவியத்தை காட்டினார். அந்த ஓவியத்தில் மழை, இடி, மின்னல் அதிகம் இருந்தன. ஆனால் அந்த ஓவியத்தின் அழகு என்னவென்றால், ஒரு மரத்தின்மீது ஒரு சிறிய கூட்டில் பறவைகள் மகிழ்ச்சியுடன் இருந்தன. என் நண்பரே, இந்த உலகத்தில் எப்போதும் நம்மைச்சுற்றிலும் குழப்பமும், பிரச்சினைகளும் இருந்தாலும், கர்த்தர் நமக்கு சமாதானத்தை தருவார்.

பறவைகள் எப்படி தங்கள் கூட்டில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனவோ, அதுபோல உங்களைச் சுற்றிலும் என்ன நடந்தாலும் தேவன் உங்கள் இருதயத்தை மகிழ்ச்சியினால் நிரப்புவார். இந்த உலகின் சூழ்நிலைகள் மோசமாக இருந்தாலும், உங்கள் இருதயம் தேவமாதானத்தினால் நிரம்பியிருக்கும். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27). ஆகவே, கர்த்தர் உங்களை இவ்வுலக சமாதானத்தினால் அல்ல, தமது சமாதானத்தினால் நிரப்புவார். அவர் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி, உங்களை செழிப்பாக்குவார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவன்மீது நம்பிக்கையாயிருங்கள். "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசாயா 26:3). ஆகவே இந்த வாக்குறுதியை நம்பி அவருக்கு நன்றி செலுத்துவோம்.
Prayer:
அன்பின் தகப்பனே,
என் இருதயத்தையும், குடும்பத்தையும், பணியிடத்தையும் உமது சமாதானத்தினால் நிரப்பும். எந்தவொரு தீங்கும் என்னை அணுகாதபடி காத்தருளும். நீர் சமாதான காரணர். உம்மில் நான் சமாதானம் காண கிருபை செய்தருளும். உமது பராமரிப்பில் பறவைகளும், பூக்களும் மகிழ்வதுபோல, என் இருதயமும் சிந்தையும் உமது சமாதானத்தால் பாதுகாக்கப்படட்டும். நான் உம்மில் பாதுகாப்புடன் இருக்க இரக்கம் பாராட்டும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.