Loading...
Samuel Paul Dhinakaran

இயலாமையை மேற்கொள்ளுங்கள்

Samuel Dhinakaran
29 May
அன்பு நண்பரே, இன்று தேவன் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தம் சங்கீதம் 18:33-லிருந்து வந்தது. “அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.”  நீங்கள் இன்று படுத்த படுக்கையாக இருக்கலாம், உங்கள் கால்களை அசைக்கக்கூட முடியாமல், உங்கள் வேலையை செய்ய முடியாமல், உங்கள் ஊழியத்தை செய்ய முடியாமல் தவிக்கலாம்.  ஆனால், இன்று தேவன்  உங்கள் கால்களை மான் கால்களை போலாக்குவார். நீங்கள் வேகமாகச் சென்று உங்கள் வேலைகளை செய்வீர்கள்.
 
உங்கள் பலவீனம் உங்கள் முன்னேற்றத்தை இனி தடுக்காது. நீங்கள் இனி சுய பரிதாபத்தில் புலம்ப மாட்டீர்கள். இன்று தேவனுடைய  வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரே  உங்கள் கால்களை மான் கால்களை போலாக்குவேன் என்று கூறுகிறார். அவர் உங்கள் கால்களையும் சரீரத்தையும் சுகமாக்கி  உங்களை உயர் ஸ்தலங்களில் நிறுத்துவார். நீங்கள் நோயுற்ற காலங்களையும் நேரங்களையும் திரும்ப நன்மையாக மீட்டுக்கொள்வீர்கள். இரட்டிப்பான ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பீர்கள். அவர் உங்களை உன்னதத்திற்கு உயர்த்துவார்.
நீங்கள் இழந்த அனைத்தையும் தேவன் மீட்டெடுப்பார். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவர் உங்களை நிலைநிறுத்துவார். நீங்கள் உயர்ஸ்தலங்களை தொடுவீர்கள். பெதஸ்தா குளத்தின் அருகே முடங்கிப்போன ஒரு மனிதனுக்கு இதுதான் நடந்தது. 38 வருடங்களாக அவருக்கு உதவவோ அல்லது அவரை குணப்படுத்தவோ யாருமில்லை. மனிதர்கள் அவரை நிராகரித்தாலும் இயேசு அவரை நிராகரிக்கவில்லை.  நம் ஆண்டவர் இயேசு அவரை தேடிச்சென்று அவரை குணமாக்கினார். ஆம், அன்பு நண்பரே, தேவன் உங்களுக்கும் இதையே செய்வார். உற்சாகமாயிருங்கள், கர்த்தரை கனம்பண்ணுங்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
இந்த அழகான வாக்குறுதிக்கு நன்றி. உமது மகிமைக்காக நீர் என்னைக் குணமாக்கி, இந்த உலகில் என்னை உன்னதத்திற்கு உயர்த்துவதற்காக நன்றி.
 
இயேசுவின்  நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000