Loading...

நல்லதை மட்டுமே தருவார்

Shilpa Dhinakaran
23 Nov
அன்பின் தேவனே, இன்றைக்கும் தேவன் உங்களுக்கு கொடுக்கின்ற வாக்குத்தத்தம் சங்கீதம் 85:12, “கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.” இந்த வாக்குத்தத்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த வசனம். ஏனென்றால் என் குழந்தை பருவத்திலிருந்து இப்போது வரை என் வாழ்க்கையில் இதுதான் நடந்தது. ஒவ்வொரு முறையும் எங்கள் குடும்பத்தில் நல்லது கெட்டது நடக்கும்போது, தேவன் நமக்கு நன்மையானதை மட்டுமே தருவார் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். உங்கள் வாழ்க்கையிலும் பல விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் எப்போதும் உங்களை நேசிக்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நீங்கள் அவருடைய பிள்ளை, எனவே அவர் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு காரியத்தையும் செய்யமாட்டார். கர்த்தர் கொடுக்கும் அனைத்தும் நன்மையானவையே. 

“அன்றியும், அவருடைய தீர்மானத்தன்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28). என் வாழ்க்கையில் நான் ஆச்சரியப்பட்ட பல சம்பவங்கள் எனக்கு நினைவிருக்கிறது. குறிப்பாக எனது பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளின் போது நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அப்போதுகூட தேவன் நன்மையானதைச் செய்தார். அவர் சிறந்த கல்லூரியில் ஒன்றில் எனக்கு படிக்க அனுமதி கிடைக்கச்செய்தார். மேலும் நான் ஆக்ஷக்ஷளு முடிக்க எனக்கு உதவினார். இதற்காக நான் ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். என் நண்பரே, எதைக்குறித்தும் கலங்கவேண்டாம். அவர் உங்கள் வாழ்க்கையில் நன்மையானதை மட்டுமே செய்வார். 
தேவனுடைய வழிகாட்டுதலின்படி ஆபிரகாமும் லோத்தும் பயணம் செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர்கள் கானானுக்கு அருகில் வந்தபோது, அவர்களிடம் ஏராளமான மந்தைகள் இருந்தது. அதனால் அவர்கள் பிரிய வேண்டியிருந்தபடியால், ஆபிரகாம் லோத்திடம் நீ விரும்பிய இடத்தை தேர்வு செய்யும்படி கூறினார். லோத் மிக பசுமையாக நீர் வளம் பொருந்தியிருந்த சோதோமைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஆபிரகாம் தேவன் காண்பிக்கும் இடத்திற்கு செல்லத் தயாராக இருந்தார். தேவன் ஆபிரகாமுக்கு பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்தை கொடுத்தார். லோத்து தேர்ந்தெடுத்த பகுதி கண்களுக்கு மிகவும் பசுமையாகவும் இனிமையாகவும் இருந்தது. ஆனால் அங்குள்ள மக்களின் பாவத்தினால் அந்த இடம் முழுவதும் அக்கினிக்கு இரையானது. ஆனால், தேவ சித்தத்துடன் சென்ற ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்பட்டார். ஆம் என் நண்பரே, தேவன் தருகிற காரியங்களை குறித்து நீங்கள் சற்றும் கவலைப்பட வேண்டாம். அது மறைக்கப்பட்ட ஒரு ஆசீர்வாதத்தை கொண்டுள்ளது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நிச்சயமாக ஒருநாள் தேவன் உங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதத்திற்காக நீங்கள் அவருக்கு நன்றி கூறுவீர்கள். 
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,

இந்த வாக்குறுதிக்கு நன்றி ஆண்டவரே, உமது பிரசன்னம் மற்றும் பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். நான் கேட்டது கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமல், நீர் எனக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தருவீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். உமது சித்தம் என் வாழ்க்கையில் நிறைவேறட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உமது நாமம் மாத்திரமே மகிமைப்படட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000