Loading...

கீழ்ப்படிதலே ஆசீர்வாதம்

Shilpa Dhinakaran
22 Jul
அன்பு நண்பரே, இன்றைய வாக்குறுதி உபாகமம் 28: 6 ல் இருந்து எடுக்கப்பட்டது.   "நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்"  என்று கூறுகிறது. நீங்கள் எங்கிருந்தாலும், எங்கு சென்றாலும், ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று கர்த்தர் கூறுகிறார். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்பதால் தான். கர்த்தர் தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இறைவன் நம்மை சந்தோஷமாக ஆசீர்வதிக்கிறார். வேதாகம  காலத்தில் ஜனங்கள் யுத்தத்திற்கு சென்றார்கள். ஆகையால், இந்த வசனம் அவர்களுக்கு மிகவும் பிடித்தது, ஏனென்றால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், அவர்கள் திரும்பி வரும்போதும் கூட, கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார்.
 
உபாகமம் 28-ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது, அது முழுவதுமாக தேவ ஆசீர்வாதத்தால் நிறைந்துள்ளது. இந்த அத்தியாயத்தின் 2 வது வசனம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அளவுகோல்களைப் பற்றி கூறுகிறது. "நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்." நாம் செய்ய வேண்டியது கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது  கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.
குழந்தைகள் கீழ்ப்படிந்து நடக்கும்போது, அவர்களின் பெற்றோர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள், அவர்கள் மீது தங்கள் அன்பைப் பொழிந்து, பரிசுகளைக் கூட கொடுக்கிறார்கள். அதேபோல், நீங்கள் தேவனுக்கு  கீழ்ப்படியும்போது கர்த்தர்  மகிழ்ச்சியடைவார், அவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். இன்று, நீங்கள் கீழ்ப்படிதலுள்ள குழந்தையாக இருப்பீர்கள் என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள். கர்த்தர் உங்களை குறித்து சந்தோஷப்படுவார், உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, என் வாழ்க்கையை முழுவதுமாக உமது கரங்களில்  ஒப்படைக்கிறேன். எல்லாவற்றிலும் எப்போதும் உமக்கு  கீழ்ப்படிய எனக்கு அருளும் பலமும் தாரும். உமது நாமத்திற்கு கு மகிமையைக் கொண்டு வருவதற்கு அருள்புரியும். இன்றைய வாக்குறுதியின்படி என்னை ஆசீர்வதிக்கப் போவதற்கு நன்றி.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000