Loading...
Dr. Paul Dhinakaran

நன்மை தடைபடாது!

Dr. Paul Dhinakaran
08 Dec
ஆண்டவர் உங்கள் வாழ்வில் நன்மை செய்ய ஆரம்பித்துவிட்டால் அது ஒருபோதும் தடைபடாது. நீராவி எஞ்சினை கண்டுபிடித்த R.L. ஸ்டீவென்சன், அதை ஓடச் செய்வதற்கு பலவகையில் முயற்சி செய்தார். ஒவ்வொருமுறை அது புறப்படும்போதும் அவர் தன் சகோதரியை, “மேரி, இங்கே வா, எஞ்சின் புறப்பட்டுவிட்டது; வந்து பார்” என்று அழைப்பார். அவரது சகோதரியும், “ஆம், அது புறப்பட்டுவிட்டது ஓடுகிறது” என்று சந்தோஷமாக சத்தமிடும்போது, அந்த எஞ்சின் நின்றுபோகும். உடனே மேரி, “ஐயோ, அது நின்றுவிட்டது” என்று கூறுவாள். ஒரு நாள் ஸ்டீவென்சன் அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு சரி செய்தார். எஞ்சின் புறப்பட்டபோது “ஸ்டீவென்சன், எஞ்சின் புற்பபட்டுவிட்டது. அது ஓடுகிறது” என்று மேரி கூறினாள். பின்னும் சிறிது நேரம் கடந்தபோது, “எஞ்சின் நிற்கவில்லை” என்று மேரி கூற ஆரம்பித்தாள். 

அதேபோல ஆண்டவரின் நன்மையும் உங்கள் வாழ்வில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். “தேவ நன்மை ஒருபோதும் தடைபடாது” என்று சத்தமிட்டு கெம்பீரித்து மகிழுங்கள். ஆண்டவர் கூறுகிறார், “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகு மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று...என்னைச் சோதித்துப் பாருங்கள்” (மல்கியா 3:10) என்று ஆண்டவர் கூறுகிறார். ஆகவே, “ஆண்டவர் எனக்கு நன்மை செய்ய ஆரம்பித்த பிறகு ஒருபோதும் நிறுத்தமாட்டார்” என்று உங்கள் இருதயத்தில் கூறுங்கள் (எரேமியா 32:40). இதன் சாரம்சம், அவர் உங்களுக்கு ‘நன்மை’ செய்வதை ஒருபோதும் நிறுத்தமாட்டார் என்பதே. ஆகவே, “ஆண்டவர் எனக்கு நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்தமாட்டார்” என்று உங்கள் இருதயத்தில் விசுவாசமாய் சொல்லுங்கள். 
பிரியமானவர்களே, அவருடைய பரிபூரணத்தினால், ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் தொடர்ந்து வரும். ஆண்டவருடைய பரிபூரணத்தை, நம்முடைய தகுதியினால் அல்ல, அவருடைய இரக்கத்தினாலே நாம் பெறுகிறோம். ஆகையினால்தான், “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6) என்று சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறான். ஆண்டவர் உங்களோடு உலாவி, ஆசீர்வாதங்கள் மட்டுமே” இருக்கும் இடத்திற்கு உங்களை வழிநடத்த தயாராக இருக்கிறார். தேவன் உங்களுக்கு தருகிற நன்மையை ஒருவராலும் தடுத்த நிறுத்த முடியாது. அவருடைய வாக்குறுதிகளை பற்றிக்கொண்டு ஆசீர்வாதமாய் வாழுங்கள்.  
Prayer:
பரலோகப்பிதாவே, 

நீரே எல்லா நன்மைகளுக்கும் ஆதாரமாயிருக்கிறீர். உமது கிருபையினாலே நான் நித்திய அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டேன். ரோமர் 8:32ல் கூறப்பட்டுள்ள உமது வார்த்தையை நான் நம்புகிறேன். "உம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் எங்களுக்காக அவரை ஒப்புக்கொடுத்த நீர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும்  அருளாதிருப்பதெப்படி?” நீர் கிருபையுள்ள தேவன். என் வாழ்வில் உமது பரிபூரண நன்மையை எதிர்பார்க்கிறேன். நான் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றையும் நீர் ஆசீர்வதித்து செழித்து வளர கிருபை செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

044 - 45 999 000 / 044 - 33 999 000