Loading...
Evangeline Paul Dhinakaran

இனி இருள் இல்லை

Sis. Evangeline Paul Dhinakaran
09 Dec
அன்பு நண்பரே, ஏசாயா 9:2-ல், “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” என்று வேதம் கூறுகிறது. இந்த உலகம் பிசாசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவன் உங்கள் கண்களை குருடாக்க தன்னால் இயன்ற மட்டும் முயற்சி செய்கிறான். சங்கீதம் 143:3-ல் உள்ளதைப்போல, அவன் உங்களை தரையோடே நசுக்க முயற்சிப்பான். ஆனால், ஒளியின் கர்த்தர் உங்களை பகலின் பிரகாசத்திற்குள் கொண்டு வருவார். ஏசாயா 58:8-ல் உள்ளதைப்போல, “அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.” இன்று எல்லாவித இருளும் உங்களைவிட்டு விலகட்டும்.

நான் என் பெற்றோரை இழந்தபோது, ​​நானும் என் உடன்பிறந்தவர்களும் மிகவும் உடைந்துபோனோம். குறிப்பாக, என் தம்பியால் அந்த வருத்தத்தைத் தாங்க முடியவில்லை. தனிமையிலும், இருளிலும் இருந்ததாகப் பலமுறை கூறியிருக்கிறான்; ஆனால், அவன் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டிருந்தான். ஒருநாள், என் அண்ணன் என்னுடன் தன் சோகத்தைப் பகிர்ந்துகொண்டபோது, ​​அவன் சொன்னான்: ‘இப்போதெல்லாம், நான் தினமும் தவறாமல் தேவனுடைய வார்த்தையைப் படித்து வருகிறேன்; அதை அதிகமதிகமாய் வாசிக்க தேவன் எனக்கு மிகுந்த தாகத்தைக் கொடுத்துள்ளார்; அதனால் கர்த்தர் என் வாழ்க்கையிலிருந்த துக்கத்தை நீக்கிவிட்டார், இப்போதெல்லாம் நான் தனிமையாக உணருவதில்லை. அவருடைய வார்த்தை எனக்கு வெளிச்சத்தைத் தருகிறது. அவருடைய வார்த்தையின் மூலம் கர்த்தர் என் தொழிலையும் ஆசீர்வதித்தார்’ என்றார்.
அன்பு நண்பரே, இது உங்கள் வாழ்க்கையிலும் நடக்கும். கர்த்தராகிய இயேசுவை நீங்கள் பற்றிக்கொள்ளும்போது, ​​ஆசீர்வாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் வாழ்க்கையை நிரப்பும். உங்கள் துக்கங்கள் யாவும் சந்தோஷமாக மாறும். ஆம், கர்த்தர் உங்களைச் செழிப்பாக்குவார். விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பும். இந்த ஆசீர்வாதம் உங்கள் வாழ்வில் நிறைவேறுவதாக நண்பரே.
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,

இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, உமது ஒளியை என்மீது  பிரகாசிக்கச் செய்து, என் வாழ்விலிருக்கும் இருளை நீக்கும். ஆண்டவரே, என்னைக் குணமாக்கி, என் துக்கங்கள் அனைத்தையும் சந்தோஷமாக மாற்றும். உமது மகிமைக்காக எழும்பி பிரகாசிக்கவும், மற்றவர்களை உமது ஒளிக்கு நேராக கொண்டு வரவும் எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000