எந்தக் கஷ்டமும் உங்களை வீழ்த்த முடியாது
Sis. Evangeline Paul Dhinakaran
15 May
அன்பு நண்பரே, “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்”(அப்போஸ்தலர் 16:31) என்று தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் அளித்துள்ளார். இன்று, தேவன் உங்கள் முழுகுடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நினைக்கிறார். இந்த வசனத்தில் பேதுரு, சிறைச்சாலைக்காரனிடம், கர்த்தரை விசுவாசித்தால் நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கூறினார். இது அப்போஸ்தலர் 16:34-ல் உள்ளபடி "அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்."
ஆம், நாம் கர்த்தரை நம்பும்போது இந்த உலகத்தை ஜெயங்கொள்ள முடியும். வேதம் கூறுகிறது, “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவான் 5:4). மேலும் 18-ம் வசனம் கூறுகிறது, “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்." அதனால் நாம் இவ்வுலகில் வெற்றி சிறந்தவர்களாக மாறிவிடுவோம்.

இவ்வுலகிலுள்ள தீமைகளையும் பாவத்தையும் நம்மால் வெல்ல முடியும். தேவன் நம்மைப் பாதுகாப்பார். உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் இருக்கிறது. ஆம், இந்த உலகம் தீமையினால் நிறைந்தது. அதனால்தான், யோவான் 16:33-ல் இயேசு கூறுகிறார், “…உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." உலகத்தை ஜெயித்த இயேசு உங்களையும் ஜெயிக்க வைப்பார். கர்த்தர் உங்களுக்கு வெற்றியைத் தருவார். அப்படியென்றால், நாம் எவ்வாறு உலகை வெல்வது? “அவர்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வார்த்தையினாலும் அவரை ஜெயித்தார்கள்" (வெளிப்படுத்தல் 12:11) என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. அவர் உங்கள் இருதயத்தில் வந்தால், இந்த உலகிலுள்ள எதுவும் உங்களைத் தொட முடியாது. எந்த பிரச்சனையும், கஷ்டமும், துன்புறுத்தலும், பஞ்சமும், நிர்வாணமும், ஆபத்தும், ஆயுதங்களும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. ஆம், “தேவனுடைய அன்பிலிருந்து நம்மை யார் பிரிக்க முடியும்?” என்று வேதம் கூறுகிறது. இவையனைத்திலும் நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்வீர்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாராக.
Prayer:
அன்பின் தகப்பனே,
இந்த அழகான வாக்குறுதிக்கு நன்றி. உமது பாதுகாப்பின் கரம் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எப்பொழுதும் இருக்கட்டும். உம்மோடு நான் நெருங்கி ஜீவிக்க உதவும். என்னை ஒரு வெற்றியாளராக மாற்றும். பொல்லாங்கன் என் குடும்பத்தை தொடாமல் காத்தருளும். என் அன்புக்குரியவர்களை உமது அடைக்கலத்திற்குள் வைத்தருளும். உமக்கு சேவை செய்கிற இருதயத்தை எனக்கு தந்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.