Loading...
Paul Dhinakaran

ஆசீர்வாதத்தின் பெருக்கம்

Dr. Paul Dhinakaran
23 Feb
என் அருமை நண்பரே, இன்று தேவன் உங்களை முழு இருதயத்தோடும் ஆசீர்வதிப்பாராக. இந்த நாளின் வாக்குறுதி வசனம் யாத்திராகமம் 23:25லிருந்த எடுக்கப்பட்டுள்ளது. “உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” என்று கூறுகிறார். நாம் அவரை மட்டுமே சேவிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். பலமுறை இந்த உலகத்தின் சுமைகள், பிரச்சினைகள், பலவீனங்கள், இந்த உலகத்தின் பாவங்கள், அநீதியான காரியங்கள், துரோகங்கள் ஆகியவை மிகப் பெரிதாகின்றது. ஆனால், இவைகளின் மத்தில் நாம் தேவனை பார்க்க முடியவில்லை. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். மற்றெல்லாக் காரியங்களும் உங்களுக்கு கூடக்கொடுக்கப்படும்.” என்று வேதம் கூறுகிறது,
 
தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன அல்லது தேவனுடைய ராஜ்யம் எதைக் கொண்டுள்ளது? அது தேவநீதியே. அது நீதியின் தேவனுடையது. அது சமாதானம் - எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானம். இதை உலகம் நமக்கு தராது. இயேசுவால் மட்டுமே தரமுடியும். இந்த மகிழ்ச்சியை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்கு கொடுக்க முடியும். தேவனால் எல்லாம் கூடுமென்று வேதம் கூறுகிறது. நீங்கள் தேவனுடைய பிள்ளையாகையால், அவர் உங்களுக்காக அற்புதங்களைச் செய்வார். பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார். நீங்கள் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதற்கான காரணங்கள் இவைகள்தான். இதன்மூலம் அவர் உங்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து உங்களை பெருகச்செய்வார். எனவே, இன்று அவர்மீது உங்கள் கண்களை திருப்புங்கள்.
உபாகமம் 7:13ல் “உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உன்னைப் பெருகப்பண்ணுகிற தேவன்” என்று வேதம் கூறுகிறது. வேதத்தில் தேவன் எவ்வாறு ஐந்து அப்பத்தையும் இரண்டு சிறிய மீன்களையும் ஆசீர்வதித்து பெருகச்செய்து ஜனங்களுக்கு கொடுத்தார் என்று யோவான் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இன்று அந்த பெருக்கத்தை உங்கள் வாழ்க்கையிலும் காணப்போகிறீர்கள். ஒருவேளை உங்களிடம் சிறிய சேமிப்பு, கொஞ்சம் மகிழ்ச்சி மட்டுமே இருப்பதாக நீங்கள் கூறலாம். ஆனால் தேவன் அதை ஆசீர்வதித்து பெருகச்செய்வார். இன்று இந்த வாக்குறுதி உங்கள் வாழ்வில் நிறைவேறும். சாறிபாத் விதவைக்கு இதுதான் நடந்தது. அவளிடம்  கொஞ்சம் எண்ணெயும், கொஞ்சம் மாவும் மட்டுமே இருந்தது. ஆனால், அவள் அதை தேவனுடைய ஊழியத்திற்கு கொடுத்தாள். எலியா அவளிடம் இருந்த அந்த சிறியதை பெருக்கி, பஞ்ச காலத்தின் இறுதி வரை  அவர்களுக்கு அதை போதுமானதாக செய்தார். தேவன் அந்த விதவைக்கு செய்ததைப்போலவே, அவர் உங்களுக்கும் செய்வார். தேவன் உங்களுக்கும் அதை ஆசீர்வதித்து தருவார். துன்பத்தின் அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி உலகம் சொல்லக்வடும். ஆனால் தேவன் உங்களுக்கு பலமடங்கு ஆசீர்வாதங்களை தருவார். நோயை உங்களிடமிருந்து விலக்குவார் என்று வேதம் கூறுகிறது. பாவத்தினால் ஏற்படக்கூடிய நோய், கிருமிகளால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அல்லது இவ்வுலகின் பொல்லாத ஜனங்களால் ஏற்படும் போராட்டங்களுக்கு அவர் உங்களை விலக்கி மீட்டு பாதுகாப்பார். 
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,

என் வாழ்க்கையிலும் உமது வாக்குறுதியை நிறைவேற்றியருளும். உமது அன்பு என்னை அரவணைக்கட்டும். ஆண்டவரே இந்த உலகில் உம்மைத் தவிர வேறு யாரும் எனக்கில்லை. என்னை ஆசீர்வதித்தருளும். நோயை என்னிலிருந்து விலக்கி, எனக்கு மகிழ்ச்சியை தந்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000